வைரல் வீடியோ: தொற்றுநோய் பரவல் காரணமாக, பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில், பலருக்கு உடல்பயிற்சி செய்வது, வாக்கிக் போவது  ஆகியவை மறந்தே போ விட்டது எனலாம். நம் வாழ்க்கையில் சோம்பல் ஆக்கிரமித்துள்ளது எனலாம். இதனால, கொரோனாவை காரணம் காட்டி படுக்கையிலே குடங்கி கிடக்கிறோம்.  
அப்படிப்பட்ட நிலையில் உங்கள் வழக்கமான உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை  மீண்டும் தொடங்க இந்த வைரல் வீடியோ உத்வேகம் தரும். ஒரு பிரெஞ்சு விண்வெளி வீரர் விண்வெளியில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆமாம், விண்வெளி வீரர்  எங்கிருந்தாலும், பிட்னஸுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார் என்பதி இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.  வைரல் வீடியோவில்  சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட், உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி, கடுமையாக உடற் பயிற்சி செய்வதைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் வீடியோவ பகிர்ந்துகொண்டு, பெஸ்கெட் பிரெஞ்சு மொழியில் “Renforcement musculaire de l’espace” என்ற தலைப்பில்  பதிவு செய்துள்ளார், அதாவது "விண்வெளியில் இருந்து பாடி பில்டிங்" என்பது அதன் பொருளாகும்.


வீடியோவை இங்கே பாருங்கள்:


 




இந்த வீடியோ சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இரு நாட்களுக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான வ்யூஸ்களை பெற்றது, அதைத் தொடர்ந்து 134 K லைக்குகள் மற்றும் 972 கமெண்டுகள் உள்ளன. ஒரு பயனர் "Stay strong" என்று  எழுதினார், மற்றொருவர் "Respect Thomas" என்று கருத்து தெரிவித்தார். மற்றவர்கள் விண்வெளியிலும் பயிற்சி செய்யும் பெஸ்கெட்டின் அர்ப்பணிப்பைப் பாராட்டினர்.


சில வாரங்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) ஆறு விண்வெளி வீரர்கள் 'மிதக்கும் பீட்சா விருந்தை' அனுபவித்து மகிழும் மற்றொரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பெஸ்கெட் பகிர்ந்துள்ளார். பீட்ஸா காற்றில் மிதக்கும் போது அதற்கான பொருட்களை சேகரித்து தயார் செய்வதை வீடியோ காட்டுகிறது!


இதுமட்டுமல்லாமல், பெஸ்கெட் அடிக்கடி விண்வெளி நிலையத்தில் இருந்து ட்வீட்களைப் பகிர்ந்து கொள்கிறார், அவரது பின்தொடர்பவர்களுக்கு ISS எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களின் வாழ்க்கையைப் பற்றியை நிலையை அறிய தகவல்களை தருகிறார்.