Viral Video: ‘நாங்களும் ஜிம்முக்கு போவோம்ல’... அசத்தும் பூனைக் குட்டி..!!
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் சிக்ஸ் பேக் வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Cat Gym Video: நம்மில் பெரும்பாலானோர் ஃபிட்டாக இருக்க வேண்டும் விரும்புகிறோம். அதனால் பலர் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள். தங்கள் விருப்பப்படி உடலை வடிவமைக்க மணிக்கணக்கில் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். சிலர் சிக்ஸ் ஃபேக்ஸுக்காகவும், சிலர் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் தொப்பையை குறைக்கவும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்கள்.
இந்நிலையில், விலங்குகளும் மனிதர்களுக்கு சளைத்ததில்லை என்பதை வைரலாகும் ஒரு வீடியோ நமக்கு உணர்த்துகிறது. பூனை ஒன்று உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சிகள் செய்து வருவதை வைரல் வீடியோவில் காணலாம். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் சிக்ஸ் பேக் வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை இங்கே காணலாம்:
ALSO READ | நாகப்பாம்பை பிடிக்க முயற்சித்த நபர்: பீதியைக் கிளப்பும் வைரல் வீடியோ
இந்த காணொளியில் பூனை ஒன்று புஷ் அப் செய்வதை காணலாம். ஒய்யாரமாக படுத்த்துக் கொண்டு புஷ் அப் செய்வது அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த கொரோனா பரவல் காலத்தில், பூனை தன்னைப் பிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிகிறது. அந்த வீடியோவில் பூனை உடற்பயிற்சி செய்யும் விதத்தை பார்த்து, பல விதமாக கருத்து தெரிவித்துள்ளனர். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த பூனைகள் போல் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | Viral Video: இணையவாசிகளை உறைய வைக்கும் ராட்சஸ மலைப் பாம்பு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR