King Cobra Viral Video: இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம்.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.
ALSO READ: Covid Vaccine: கொரோனா ஊசி போட்டுக் கொள்ள மறுத்து சாமியாடி சாதித்த பாட்டி
இந்த வீடியோவில் பாம்பு (Snakes) பிடிப்பவர் நாகப்பாம்பை பிடிப்பது போல் தெரிகிறது. அப்போது, அந்த கிங் நாகப்பாம்பு அந்த நபரின் மீது கோபமடைந்து அவரைத் தாக்குகிறது. இதற்குப் பிறகு வீடியோவில் காணப்படும் காட்சிகள் நம்மை மிரட்டும் வகையில் உள்ளன.
வீடியோவை பார்க்கவும்-
— (@Animal_WorId) November 30, 2021
இதையடுத்து அந்த நபருக்கு உதவி செய்ய பலர் வந்து இறுதியில் நாகப்பாம்பு பிடித்தனர். இந்த வீடியோ Animal_World என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. தற்போது அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, எப்போது படமாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
ALSO READ: கட்டிங் அண்ட் ட்ரிம்மிங் செய்ய அமர்த்தலாய் சலூனுக்கு வந்த குரங்கின் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR