சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உலகெங்கும் மின் வாகனங்கள் பயன்பாட்டை பல நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும், மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. இப்போது பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சார கார்களுக்குப் அடுத்தபடியாக, இப்போது மக்களின் ஆர்வம் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல மின்சார ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன, ஓலா, ஹோண்டா, டிவிஎஸ் என பல நிறுவனங்கள், மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளன.


இந்நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ எப்போது, ​​எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிப்பதற்கு முன்பு, மிக அதிக அளவில் புகையை வெளியேற்றுவதையும் 1.51 நிமிட நேரம் ஓடும் இந்த வீடியோவில் காணலாம். @in_patrao என்ற ட்விட்டர் கணக்கில் பயனர் இதனை பகிர்ந்துள்ளார். சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்ட ஸ்கூட்டரில் இருந்து புகை வெளியேற ஆரம்பிப்பதை பார்த்து மக்கல் அங்கிருந்து விலகிச் செல்வதையும் வீடியோவில் காணலாம்.


ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!! 


வீடியோவை இங்கே பாருங்கள்:



வீடியோ எப்போது, ​​எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்கள் வழக்கமான வாகனங்களை விட இ-ஸ்கூட்டர் மற்றும் மின்சார வாகனம் என ஈர்க்கப்படும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த சம்ப்வம் குறித்து கருத்து தெரிவித்த உலகெங்கிலும் உள்ள தீயணைப்பு வீரர்கள், பல சமயங்களில், தீ பிடித்ததற்கு சந்தையில் வாங்கும் பேட்டரிகள் பழுதடைந்தது காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். ஸ்கூட்டர்களுடன் கிடைக்கும் அசல் பேட்டரிகள் தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளனர். 


ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR