கேரளாவில்  வெள்ளம், நிலசரிவுகளால், மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. வெள்ள நீரில், மரம் செடி, கொடிகள் மட்டுமல வீடுகள் கூட அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக ஊடகத்தில் வைரலாகின. இருப்பினும், ஒரு திருமண ஜோடி மனம் தளராமல், வல்லுவனுக்கு புல்லும் ஆயுதம் என நிரூபித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக மணமகன்கள் திருமண மண்டபத்திற்கு, மாப்பிள்ளை ஊர்வலமாக  காரில் வருவார்கள். ஆனால் அந்த வாய்ப்பு ராகுல் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு கிடைக்கவில்லை. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அவர்கள் திங்கள்கிழமை காலை ஒரு பெரிய அலுமினிய சமையல் பாத்திரத்தை படகாக்கி அதில் திருமண இடத்தை அடைந்தனர். பாரம்பரியமாக அரிசி சமைக்கும் தாமிர பாத்திரத்தில் தம்பதியினர் கோவிலுக்கு வந்து முகூர்த்த நேரம் தவறமால் இனிதே திருமணம் செய்து கொண்டனர்.


"பாத்திரத்தில் பயணம் செய்ய நாங்கள் பயப்படவில்லை," என்று உற்சாகமாக ராகுல் கூறினார். அதே நேரத்தில் ஐஸ்வர்யா, "திட்டமிட்ட சுப நேரத்தில் திருமணம் நடந்ததில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.


வீடியோவை இங்கே பாருங்கள்:



ALSO READ | பதைபதைக்க வைக்கும் வீடியோ.; ஆற்றில் அடித்து செல்லப்படும் வீடு.!!


‘பாத்திர படகு' பயணத்தை ஏற்பாடு செய்த ஒரு உறவினர், "கோவிலுக்கு அருகில் உள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன, ஆனால் நாங்கள் மணமகன் மற்றும் மணமகன் இருவரையும் சரியான நேரத்தில் கொண்டு வர இவ்வாறு திட்டம் தீட்டினோம்" என்றார். அங்கு ஒரு சில உறவினர்கள் இருந்தனர். திருமண மண்டபம் வெள்ளத்தில் மூழ்கியதால், கோவில் பூசாரி முன்னிலையில் திருமண விழா நடந்தது.


ALSO READ | Viral Photo: சீறும் மூன்று பாம்புகளா; இல்லை பட்டுப்பூச்சியா; உண்மை என்ன..!!!


திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவிட் காரணமாக மிக குறைவான பேருக்கு தான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு அவர்கள் கோவிலுக்கு வந்தபோது தண்ணீர் ஏதும் இல்லை என்றும் ஆனால் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் அந்த இடம் வெள்ளத்தில் மூழ்கியது என்றனர்.


ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR