Buffalo Lion Fight Video: இணைய உலகில், சில நேரங்களில் நம்மால் நேரில் பார்க்க இயலாத, அரிய காட்சிகளை காணலாம். தற்போது இதுபோன்ற அரிய வீடியோ பல்வேறு தளங்களில் காணக் கிடைக்கின்றன. ஒரு காட்டில் எட்டு சிங்கங்கள் சேர்ந்து தனியாக காட்டு எருமையை வேட்டையாடும் வீடியோ காட்சி தற்போது மிகவும் வைரலாகியுள்ளது. மிகவும் அஞ்சப்படும் வேட்டை விலங்குகளில் ஒன்றாகவும், காட்டின் ராஜாவாகவும் கருதப்படும் இந்த எட்டு சிங்கங்கள் சேர்ந்து கொண்டு  ஒரு காட்டு எருமையை தாக்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டு எருமையின் கதை அவ்வளவு தான் என நீங்கள் அஞ்சும் நேரத்தில்ல், சில வினாடிகளுக்குப் பிறகு, என்ன நடந்தது என்பதைப் பார்த்தால், உங்கள் கண்களையே உங்களால் நமப் முடியாது. இந்த வீடியோவை (Viral Video) வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பிறகு பார்க்கப்பட்டுள்ளது மற்றும் சுமார் நான்காயிரம் பேர் வீடியோவை விரும்பியுள்ளனர்.


வைரலாகி வரும் சுமார் ஒரு நிமிட வீடியோவில், எட்டு சிங்கங்கள் சேர்ந்து காட்டில் எருமை மாட்டை வேட்டையாடுவதைக் காணலாம். அவற்றில் சில காட்டு எருமையின் முதுகில் மீது அமர்ந்தன. சில அதன் கால்களை கவ்வி பிடித்தது. ஆனால், இத்தனைக்கு பிறகு தொடர்ந்து எருமையை வீழ்த்த முயன்றும் வெற்றி பெறவில்லை. அதிக எண்ணிக்கையிலான சிங்கங்கள் ஒன்றாக தாக்கினாலும் எருமை மனம் தளராமல் உயிரை காக்க போராடுவது தான் வீடியோவின் சிறப்பு. தொடர்ந்து போராட்டிக் கொண்டே இருக்கும் போது, ஆச்சர்யமான அந்த நிகழ்வு ஏற்பட்டது. 


ALSO READ | நாகப்பாம்பை பிடிக்க முயற்சித்த நபர்: பீதியைக் கிளப்பும் வைரல் வீடியோ


சிங்கங்கள் காட்டு எருமை சூழ்ந்து கொண்டுள்ளதை பார்த்து, அருகில் நின்றிருந்த மற்றொரு  காட்டு எருமையும் அங்கு சென்று, ஒரே தாக்குதலில் பல சிங்கங்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. அதன் பிறகுதான் உண்மையான சண்டை தொடங்குகிறது. சிங்கங்களுக்குப் போட்டியாக இரண்டு காட்டு எருமைகள் களத்தில் இருப்பதைக் காணலாம். சில நொடிகளுக்குப் பிறகு காட்டு எருமைக் கூட்டமே அங்கு வந்து அனைத்து சிங்கங்களையும் தாக்கின. கடைசியில், தாக்குதல் நடத்த முடியாமல், சிங்கங்கள் அங்கிருந்து ஓடி செல்வதைக் காணலாம். 


வீடியோவை இங்கே பாருங்கள்:




இந்த வீடியோ சில காலம் முன்பு பகிரப்பட்ட பழைய வீடியோவாக தோன்றினாலும் மீண்டும் சமூக ஊடக உலகில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


ALSO READ | Viral Video: இணையவாசிகளை உறைய வைக்கும் ராட்சஸ மலைப் பாம்பு..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR