இது தான் ‘கண்டதும் காதலா’; பூனையின் அழகில் மயங்கிய குரங்கின் அழகிய முத்தம்..!!
இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், சில வீடியோக்கள் மிகவும் வைரலாவதைக் காணலாம்.
இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், சில வீடியோக்கள் மிகவும் வைரலாவதைக் காணலாம். வைரலாகும் சில வீடியோக்கள், சில திகிலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், சிலவற்றை பார்த்தாலே, மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும். குரங்குகளுக்கு நாம் ஆபத்தை ஏற்படுத்தாத வரை, தொல்லை கொடுக்காத வரை, மனிதர்களிடம் மட்டுமல்ல, மற்ற விலங்குகளிடமும் அது மிகவும் அன்பாக பழகும் உயிரினங்கள் என்பதை இந்த வீடியோ நிரூபிக்கும். பொதுவாக நாய்கள், குரங்குகளை அதிகம் விரும்புவதில்லை என்றாலும், குரங்குகளுடன் நட்பு கொள்வதில் பூனைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
மேலும் படிக்க | காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை; பெண் சிங்கத்தை உக்கிரமாக தாக்கும் ஆண் சிங்கம்!
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘naturre’ என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டது. பூனையின் உரிமையாளர் தனது அபிமான வெள்ளை பூனை ஒரு குரங்குடன் நட்பு கொள்ள உதவுவதை இது காட்டுகிறது. குரங்கு, மிகவும் அழகான் பூனையை பார்த்ததும், மயங்கி அதன் கால்களை பற்றிக் கொள்வதைக் காணலாம்.
முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிட்டதாகத் தோன்றும் குரங்கு, ஒரு ஜென்டில்மேன் போல் அதன் பாதத்தை எடுத்து முத்தமிடுகிறது. பின்னர் அதன் அழகான முகத்தில் முத்தமிட முயற்சிக்கிறது. பூனையும் குரங்கு செய்யும் செல்யலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கும் குரங்கின் மனது புரிந்ததைப் போல் தான் தெரிகிறது.
அவர்களின் சந்திப்பு குறுகியதாக இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே அழகான அன்பு பரிமாற்றம் இருந்ததை காணலாம்.
வைரலான வீடியோவை கீழே காணலாம்:
மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR