சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில், வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மூதாட்டி ஒருவர் கண் கலங்குவதை பார்த்து, உங்கள் கண்களும் கலங்கி விடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறந்தநாள் அனைவருக்கும் சிறப்பு. பிறந்த நாளில் பெரும்பாலானோர் தங்களுக்குப் பிடித்த இடத்தில் விருந்து உண்பது வழக்கம். தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் மறக்க முடியாத நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்களது பிறந்த நாளை மறக்க முடியாத பிறந்த நாளாக இருக்க வேண்டும் என அவர்களது அன்புக்குரியர்கள் அவர்களுக்கு அச்சர்யம் அளிக்கும் வகையில் பரிசுகளை வழங்குகின்றனர்.. இதற்காக, பெரும்பாலானோர் பல்வேறு திட்டங்களை வகுத்து, தங்கள் குடும்பம், நண்பர்கள் போன்ற முக்கிய நபர்களை வரவழைத்து, தங்கள் மகிழ்ச்சியில் அவர்களையும் பங்கு கொள்ளச் செய்கிறார்கள். சமீபத்தில், இதே போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் 84 வயதான பெண் ஒருவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியது உங்கள் மனதைத் தொடும். இந்த காணொளியை பார்த்த அனைவரின் இதயமும் மகிழ்ச்சியினாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பி வழியும். இந்த அற்புதமான வீடியோவை நீங்களும் பாருங்கள்.


வைரலாகி வரும் இந்த வீடியோவில், வயதான பெண் ஒருவர் தனது பிறந்தநாளில் தனக்கு பிடித்த உணவகத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது மனதையும் உருக்கியது. 


மேலும் படிக்க | Viral Video: மிக குறுகிய மலை முகட்டில் வீரர் புரியும் சாகசம்; அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!


வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கீழே காணலாம்:
 



வீடியோவின் தொடக்கத்தில், ஒரு வயதான பெண்மணி தனது 84 வது பிறந்தநாளில் தனக்கு பிடித்த உணவகத்திற்கு வந்திருப்பதை நீங்கள் காணலாம். அப்போது, ​​அவளது கணவனுடன், அவள் மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்படுவதையும் காணலாம். திடீரென உணவக ஊழியர்கள் மூதாட்டியின் பிறந்தநாளை சத்தமாக அறிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்த உடன், ​​அவர் உணர்ச்சி வசப்படுவது அனைவரின் மனதையும் உருகச்செய்து விட்டது.


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் 'குட் நியூஸ் டாக்' என்ற பெயரில் பகிரப்பட்டுள்ளது, இதில் 84 வயதான பெண் உணர்ச்சி படுவது இதயங்களை உருக்குகிறது. இந்த வீடியோவைப் பகிரும் போது, ​​'இது காண்பதற்கு மிகவும் அழகான, மனதை தொடும் காட்சியாக இருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரோஸி!'என பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.


மேலும் படிக்க | சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | மாஸா பீடி பிடித்து பிலிம் காட்டும் தாத்தா: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ