Viral Video: மழையில் நனைந்தால் எனக்கு சளி பிடிக்குமே... ரெயின் கோட்டுடன் உலாவும் நாய் குட்டி!
இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.
இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் பெரும் ரசிக பட்டாளத்தை ஈர்த்த ஒரு வைரல் வீடியோவை இங்கே காணலாம். மனிதக் குழந்தையைப் போலவே, விலங்குகளின் குட்டிகள் செய்யும் குறும்புகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். அதிலும் நாய் குட்டி செய்யும் குறும்புகளை ரசிக்காதவர் யாராவது இருக்க முடியுமா என்ன... வைரலாகி வரும் வீடியோவில், அழகான நாய்க்குட்டி ஒன்று, ரெயின் கோட் ஒன்றை அணிந்து கொண்டு உலா வருவதைக் காணலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாய்க் குட்டிக்கு மிகவும் பொருத்தமான அளவில், அதற்கென்றே தைக்கப்பட்டது போல் இருக்கிறது. அதன் உரிமையாளர் தனது செல்ல நாய்குட்டிக்கு, இதனை வாங்கி அணிவித்திருப்பார் போலும்.
சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகும் இந்த வீடியோ @dogsofinstagram என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது வரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது. மஞ்சள் நிற ரெயின் கேட் அணிந்து நாய் குட்டி உலா வரும் வீடியோவை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது எனலாம்.
மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த அழகான நாய்குட்டியின் இந்த குறும்பை வெகுவாக ரசித்து மெய் மறந்த பார்வையாளர்கள், பல விதமான கருத்துகளைப் பதிவேற்றி வருகின்றனர். அதில் விலங்குகள் எப்பொழுதும் உங்களை ஏதோ ஒரு வகையில் வியக்க வைக்கும் என்று ஒருவர் சரியாகச் சொல்லியிருக்கிறார்.நாய் குட்டி ரெயின் கோட் அணிந்து உலா வருவது உண்மையில் உங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் என உறுதியாக கூறலாம்.
மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ