கொச்சி: கொச்சியின் களமசேரியில் உள்ள பரபரப்பான துறைமுகம்-விமானநிலைய சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, ஒரு பெரிய மலைப்பாம்பு காணப்பட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளமுள்ள இந்திய ராக் மலைப்பாம்பு இரவு 11.10 மணியளவில் KSEB அலுவலகத்திற்கு அருகிலுள்ள பரபரப்பான பகுதியில் சாலையின் குறுக்கே மெதுவாக ஊர்ந்து சென்றது. இதற்கிடையில், சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் பாம்பு ஊர்ந்து செல்லும் காட்சியை படம் மற்றும் வீடியோ (Viral Video) எடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலைப்பாம்பு துறைமுகம்-விமான நிலையச் சாலை வழியாகச் செல்வதைக் காணொளி காட்டுகிறது. பாம்பு சாலையைக் கடக்க நான்கைந்து நிமிடங்கள் ஆனது, மக்கள் அது சாலையில் இருந்து நகரும் வரை காத்திருந்தனர். அவ்வழியே சென்ற வாகனம் ஏதும் ஊர்ந்து செல்லாமல் இருக்க, சிலர் நடுரோட்டில் நின்றனர். மெதுவாக ஊர்ந்து சென்று சாலையோரத்தில் இருந்த புதர்களுக்குள் மலைப்பாம்பு மறைந்தது.


ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


வீடியோவை இங்கே காணலாம்:




வனத் துறை அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ”வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மலைப்பாம்புகளை மீட்க வேண்டும் அழைப்பு வருகிறது. கொச்சியில் பரந்த சதுப்பு நிலம் இருப்பதால், மலைப்பாம்புகள் மிக அதிகம் காணப்படுகின்றன என்றார்.


ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR