பாம்பை நினைத்தாலே நமது மனதில் ஒரு வித அச்ச உணர்வு பரவும். அதைத் தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என்கிறார்கள். இருப்பினும், பலர் பாம்பு வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறார்கள். ஏனெனில் அவை மிகவும் சுவாரஸ்யமாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றன. நேரில் நெருங்க முடியாத பாம்புகளின் பல்வேறு வகையான வீடியோக்களை மக்கள் இந்த வீடியோக்களின் மூலம் கண்டு களிக்கிறார்கள். தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில் இரு பாம்புகளுக்கு நடுவில் நடக்கும் ஒரு வித விளையாட்டை காண முடிகின்றது. இருப்பினும், இந்த இரு பாம்புகளையும் நிம்மதியாக இருக்க விடாமல், யாரோ அதனை புகைப்படம் எடுக்க அதில் ஒன்று வெட்கப்பட்டு விலகிச் சென்று விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டு பகுதியில், விலங்குகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பது... விலங்குகளுக்கும் நல்லது. மனிதர்களுக்கும் நல்லது.  இந்த பாம்புகளும் மனிதர்களின் குறுக்கிட்டால், துணையின் அன்பை அனுபவிக்க முடியாமல் போயுள்ளது. 


வைரலாகும் பாம்பு வீடியோவை கீழே காணலாம்:



இதே போன்று, சில நாட்களுக்கு முன் வைரலாகும் ஒரு வீடியோவில், முட்டையை திருடுவதற்காக, கூடைக்குள் நுழைந்த பாம்பு, வாயில் முட்டையுடன் கூடையில் சிக்கிய கொண்டு தவித்ததைக் காணலாம். உயரத்தில் கூடையில் முட்டையை வைத்திருந்த நிலையில், அதனை சாப்பிட அங்கு வந்த பாம்பு கூடையின் பக்கங்களில் உள்ள துளைகள் மூலம் பாம்பு அதன் முகத்தையும் அதன் உடலின் ஒரு சிறிய பகுதியையும் நுழைத்துக் கொண்டு செல்கிறது. ஆனால், அது முட்டையை விழுங்கியபோது, அதன் தொண்டை பகுதி பெரிதானதால், கூடையிலிருந்து வாயை வெளியே எடுக்க முடியவில்லை. முட்டையைக் கைவிடாமல் கூடையிலிருந்து வெளியேற பாம்பு போராடுவது வீடியோவில் காணலாம். இறுதியில், பாம்பு முட்டையை வெளியே துப்ப வேண்டி இருந்தது. கீழே உள்ள இணைப்பில் அந்த வீடியோவைக் காணலாம்.


மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!


சமீபத்தில் சில நாட்களுக்கு முன், தவளை  ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பாம்பின் பெயரை கேட்டால் நூறு காத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 


மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ