இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் ஞாயிற்றுக்கிழமை (மே 9) தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஒரு அசத்தலான வீடியோ கிளிப்பைப் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு யானை கிரிக்கெட் விளையாடுவதைக் காண முடிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இந்த வைரல் வீடியோவில் (Viral Video), ஒரு பழக்கப்பட்ட கிரிக்கெட் ஆட்டக்காரரைப் போல ஒரு யானை பேட்டால் பந்தை அடிப்பதை நெட்டிசன்கள் கண்டுகளித்து வருகின்றனர். 


இந்த வீடியோவில், ஒரு யானை தனது தும்பிக்கையால் பேட்டை பிடித்திருப்பதைக் காணலாம். அதை நோக்கி போடப்படும் பந்தை அந்த யானை வீசி அடிப்பதையும் நாம் இந்த வீடியோவில் காண முடிகிறது. 


"இன்சைட்  அவுட் கவரஸ். தும்பிக்கைக்கும் கண்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அற்புதம். அபார ஆட்டம் #Gannu #cricket #incredible" என்று சேவாக் (Virendra Sehwag) இந்த வீடியோவில் எழுதியுள்ளார். 



ஆஷஸ் தொடருக்கு தயாராகி வரும் இங்கிலாந்து அணியின் பேடிங் லைன்-அப் குறித்து வாகன் கவலை தெரிவித்துள்ளார். "இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் நல்ல பார்ட்னர்ஷிப்பை என்னால் பார்க்க முடியவில்லை. இந்த கோடையில் அணி பார்ட்னர்ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நல்ல பேட்டிங் இல்லாமல், ஆஸ்திரேலியாவில் வெல்ல முடியாது" என்று ஃபாக்ஸ் கிரிக்கெட்டிற்கு அளித்த பேட்டியில் வாகன் கூறினார்.


"சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தும் சிறந்த அணிகளுக்கு எதிராக இப்போது அவர்கள் 250-300 ரன்களை எடுக்கிறார்கள். சில சமயங்களில் அதை விட குறைவாகவும் எடுக்கிறார்கள். இப்படி ஆடினால் ஆஷசை வெல்ல முடியாது. 400-450 ரன்களை எடுக்க என்ன வழி என இங்கிலாந்து அணி பார்க்க வேண்டும்" என்று வாகன் மேலும் கூறியுள்ளார்.


ALSO READ: What the fish! வலையில் சிக்கிய மெகா மீன்: Viral ஆகும் ராட்சத மீனின் படங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR