WATCH: சென்னை சேப்பாக்க மைதானத்தில் `விசில் போடு` விராட் கோலியின் கொண்டாட்டம்
ஓராண்டிற்கு பிறக்கு மைதானத்தில் நேரடியாக கிரிக்கெட் போட்டியை பார்க்கும் பரவசத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெற்றுள்ளனர்.
IND vs ENG 2nd Test: இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி களை கட்டியிருக்கிறது. கொரோனா தாக்கத்தால் குலைந்து போன அனைத்தும் மீண்டு வரும் நிலையில், ஓராண்டிற்கு பிறக்கு மைதானத்தில் நேரடியாக கிரிக்கெட் போட்டியை பார்க்கும் பரவசத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெற்றுள்ளனர்.
பார்வையாளர்களுடன் போட்டியை நடத்தலாம் என பி.சி.சி.ஐ ஒப்புதல் அளித்த பின்னர், 2019 அக்டோபருக்குப் பிறகு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்கும் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முக்கியமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்குள் 33,000 ரசிகர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.
Also Read | India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
கூட்டம் களை கட்டினால் சிறப்பாக செயல்படுவார் என்று சொல்லப்படும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, பார்வையாளர் அரங்கில் இருந்த ரசிகர்களை நோக்கி சைகை காட்டினார். இங்கிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்தபோது, இந்திய அணியை உற்சாகப்படுத்துமாறு கேப்டன் அவர்களை வலியுறுத்தினார்.
"விசில் போடு" என்ற சமிக்ஞையை செய்தார் விராட். இது இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸின் கேட்ச்ஃபிரேஸ் (catchphrase) ஆகும். விசில் சத்தம் கேட்கலை, இன்னும் சத்தம் வேண்டும் என்று விராட்டின் சைகை சொல்கிறது.
Also Read | இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஃபேஸ்புக் BLOCK செய்த காரணம் என்ன?
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்தியா இங்கிலாந்தை 134 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 195 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர்.
இதே சென்னை மைதானத்தில் 227 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா இழந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்ல இந்தியா முனைப்பாக இருக்கிறது.
Also Read | இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஃபேஸ்புக் BLOCK செய்த காரணம் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR