சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் வெளியாகும் வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன. இணைய உலகில், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு,  ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் அதிகமாக பகிரப்படுகின்றன.


பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். 


மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்


பாம்புகளில் பல வகை உண்டு. அவற்றில் பெரும்பாலானவை மிகவும் விஷத்தன்மை கொண்டவை. அவற்றின் ஒற்றைக் கடி, மரணத்திற்கு காரணமாகும். இதனால்தான், பல உயிரினங்களும் பாம்புகளை கண்டால் பயந்து தெறித்து ஓடுகின்றன.


கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு போரிடும் படைவீரர்களே பாம்பு என்றால் கலங்கிவிடுவார்கள் என்பதால் தான் படையே நடுங்கும் என்றும் கூறப்படுகிறது.


இருப்பினும், பாம்புகளை கண்டு அஞ்சாத சிலரும் உள்ளனர். பாம்புகளை அசால்டாக கையாளும் ஒரு நபரின் வீடியோ ஒன்று, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


ஆச்சரியமான அந்த வீடியோவில், ஒரு நபர் தனது கழுத்தில் பாம்பை மாலையாக போட்டிருக்கிறார். அதை ரசித்து தடவிக்கொடுக்கும் அவரது முகத்தில் அன்பு கூத்தாடுகிறது. 


மேலும் படிக்க | பாம்புத் தோல் உரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்


சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அழகிய இளைஞர் ஒருவர், கழுத்தில் போட்டுள்ள பாம்பு தனது பல்லை வெளியே நீட்டுவதைப் பார்த்தால் நமக்கு பயமாக இருந்தால், இந்த இளைஞரோ அதை ரசிக்கிறார்.


வைரலாகும் வீடியோவை இங்கே பாருங்கள்:



இந்த வீடியோவின் ஹைலைட்டே, அந்த பாம்பு தன்னை நோக்கி திரும்பும்போது, அதற்கு தனது உதட்டால் முத்தம் கொடுப்பது தான்! நீ வேற லெவல் மச்சி என்று பலரும் இந்த வீடியோவுக்கு கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். பாம்புகள் தொடர்பான இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


ஸ்நேக் வோர்ட்ல்ட் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கில் இருந்து பல பாம்பு வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!


மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR