@TWWLLTM என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், முதியவர் ஒருவர் முதலையுடன் சண்டையிடுவதைக் காண முடிகிறது. ஒருவேளை அந்த முதியவருக்கு ஆபத்துகளுடன் விளையாடுவதில் விருப்பம் இருந்திருக்கலாம். அதனால்தான், பயமுறுத்தும் முதலைக்கு அருகில் எந்தவித பயமும் இல்லாமல் செல்கிறார். அத்துடன் அதன்மீது அமர்ந்து அதனை பிடிக்கவும் முயற்சி செய்கிறார். ஆனால் அடுத்த நொடியே வேட்டைக்கார முதலை, முதியவரின் காலை பிடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிங்கங்களுக்கு நடுவே யானைக்கூட்டம் வந்தால்? வைரலாகும் பகீர் வீடியோ


இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. இதுபோன்று பல வீடியோக்கள் இருக்கின்றன. இவரைப் போலவே துணிச்சலானவர்கள் மற்றும் விலங்கு உள்ளிட்ட ஆபத்துகளுடன் விளையாடுவதை விரும்புபவர்களை ஏராளமாக பார்க்கலாம். உண்மையில், ஆபத்தான விலங்குகளை முட்டாளாக்குகிறோம் என்று நினைத்து தவறு செய்யும் மக்களுக்கு, சில நேரங்களில் வன விலங்குகள் தங்கள் நிலையை நினைவுபடுத்தவும் தவறுவதில்லை. அவர் எதற்காக முதலைக்கு அருகில் சென்றார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை முதலையை தான் லாவகமாக பிடித்துவிடுவேன் என நண்பர்களுக்கு காண்பிக்க சென்றாரோ என்னவோ தெரியவில்லை, ஆனால் அவரின் முயற்சி தோல்வியில் முடிந்து முதலையிடம் கடி வாங்கிக் கொள்கிறார்.



நல்ல வேளை முதலை ஒரு சில தாக்குதல்களுடன் அவரை விட்டுவிட்டது. இன்னும் ஆக்ரோஷமாக இருந்திருந்தால் அந்த முதியவரின் உயிரை காப்பாற்றியிருப்பது என்பது சிரமமான ஒன்றாக மாறியிருக்கும். ஒருவேளை பண்ணை தோட்டத்தில் வளரும் முதலை உடல் நிலை சரியில்லாமல் இருந்து அதனை குணப்படுத்த மருந்து செலுத்த சென்றிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். சிலர் கண்காணிப்பு கருவியை பொருத்த அவர் முற்படும்போது இப்படியான ஆபத்தில் சிக்கிக் கொண்டார் என்ற தகவலும் உலாவுகிறது. எது எப்படி இருந்தாலும் விலங்குகளுக்கு அருகில் செல்லும்போது தகுந்த பாதுகாப்போடு செல்ல வேண்டும். இல்லையென்றால் இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது. டிவிட்டரில் மட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகாமானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கின்றனர்.  


மேலும் படிக்க | மானை கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்! இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ