சிங்கங்களுக்கு நடுவே யானைக்கூட்டம் வந்தால்? வைரலாகும் பகீர் வீடியோ

Elephant Video Viral: யானைகள் சிங்கங்களின் நிலையை எப்படி மோசமாக்கியது என்பதை வைரல் வீடியோவில் பார்த்தால் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சிங்கங்களுக்கு நடுவே யானைக்கூட்டம் புகுந்தால்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2023, 05:06 PM IST
  • யானைகள் சிங்கங்களின் நிலையை மோசமாக்கும் வீடியோ
  • விலங்குகளின் வைரல் வீடியோ
  • சிங்கம் சிங்கிளா இருந்தாலும், யானை கூட்டமாக இருக்கும்
சிங்கங்களுக்கு நடுவே யானைக்கூட்டம் வந்தால்? வைரலாகும் பகீர் வீடியோ title=

யானை வீடியோ வைரல்: தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இணைய உலகம் வேறு விதத்தில் வித்தியாசமான உலகமாக பரிமாண வளர்ச்சி பெற்றுள்ளது. பல வித விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளஉதவும் இணைய உலகம், நம்மால் கற்பனையும் செய்து பார்த்திட முடியாத அனுபவங்களை வழங்குகிறது.எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் என்பதை இணைய உலகமும் எதிரொலிக்கிறது.

சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் பல்வேறு செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இணைய உலகம் இருந்தாலும், இதன்மூலம் சில சிக்கல்கலும் உள்ளன. ஆனால், அதை சரியான முறையில் பயபடுத்தினால் பயமில்லை.

இணையத்தில் வெளியாகும் வீடியோக்களுக்கு இணையவாசிகள்பல வித கமெண்டுகளை அளித்து, பகிர்ந்தால், அவை வைரலாகின்றன.

மேலும் படிக்க | Viral Video: வகுப்பறையில் இப்படியா..வைரலாகும் மாணவ - மாணவியின் வீடியோ

அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள உதவும் வீடியோக்கள், அதிலும் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகின்றன. இவற்றில் விலங்குகளின் பல வித்தியாசமான குணங்களையும், செயல்பாடுகளையும் நாம் காண்கிறோம். . 

யானைகள் சிங்கங்களின் நிலையை எப்படி மோசமாக்கியது என்பதை இதில் காணலாம். சிங்கங்கள் இப்படி அச்சப்படுவதை நாம் பார்த்திருக்க முடியாது. சிங்கம் காட்டின் ராஜா என்றால், யானை பலத்தில் சிங்கத்திற்கு சளைத்தது இல்லை என்பதை நிரூப்பிக்கும் வீடியோ இது.

மேலும் படிக்க | ‘அப்படியே ஷாக் ஆய்ட்டேன்’: தாக்க வந்து, பல்பு வாங்கி ஓடியே போன கரடி, வைரல் வீடியோ 

யானையும் சிங்கமும் தங்களது பலத்திற்காக மிகவும் அறியப்பட்டவை. அதனால் தான், யானைகளை வேட்டையாடுவதற்காக சிங்கங்கள் பாய்வதை மிகவும் அரிதாகவே பார்க்க முடியும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், யானைகள் சிங்கத்தை ஓட ஓட விரட்டி விடும்.  யானை மற்றும் சிங்கம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது

 

 

காட்டில் ஓய்வெடுக்கும் சிங்கங்களுக்கு இடையே யானைகள் கூட்டம் சென்றால், அவற்றின் ரியாக்சன் எப்படி இருக்கும்? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பதறுவதில்லை. என்றாலும், இந்த வீடியோவைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிரது. 

சிங்கங்களிடம் சென்ற யானைக் கூட்டம் 
 இந்த காணொளியில் சில சிங்கங்கள் காட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. சிறிது நேரத்தில் யானைக்கூட்டம் அங்கு வருகிறது. சில யானைகள் அங்கே அமர்ந்திருக்கும் சிங்கங்களை உற்றுப் பார்க்கத் தொடங்குகின்றன.

இப்போது இந்த யானைகளில் ஒன்று மெதுவாக சிங்கங்களை நோக்கி நகர்கிறது. யானையைப் பார்த்ததும் சிங்கங்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகல் என்ன?  சிங்கங்களை பயமுறுத்துவதில் வெற்றி பெற்றதா யானை?

யானைகள் மற்றும் சிங்கங்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது Wildlife_stories என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கத்தியை தீட்டி பட்டையை கிளப்பும் கேங்க்ஸ்டர் குரங்கு: விக்கித்து போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News