தன் கணவனை மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்த மனைவி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்துள்ளது. ஒரு பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களை ரகசியமாக பின்தொடர்ந்து சென்ற அவரது மனைவி, ஹோட்டலுக்கு முன்னால் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தியதும், அதற்கு அடுத்து நடந்த சம்பவம் குறித்து வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவில் இருக்கும் காட்சியை பார்த்தால், காரில் அமர்ந்திருந்த ஆணும் பெண்ணும் அநேகமாக ஒரே ஹோட்டலுக்குள் செல்ல வந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில், ஏற்கனவே கணவன் மீது சந்தேகம் கொண்டிருந்த மனைவி, அவரைப் பின்தொடர்ந்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வந்துள்ளார் என்பது மட்டும் நம்மால் உணர முடிகிறது.


ALSO READ | இவர்தான் சிங்கப் பெண்ணோ? இது சீறும் சிங்கமல்ல! செல்லம் கொஞ்சும் மியாவ் lioness!


 



அந்த வீடியோவை பார்க்கும்போது, அவரது மனைவி அங்கு சென்றவுடன், காரின் உள்ளே அமர்ந்திருந்த பெண்ணை இழுத்து அடிக்க ஆரம்பிக்கிறார். காரில் இருந்த பெண் தனது முகத்தை துப்பட்டாவால் மூடி இருந்தார். அதை அகற்ற முயன்ற தனது மனைவியின் பிடியிலிருந்து தனது கள்ளக்காதலியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அதேநேரத்தில் தனது கணவரிடம், 'யே கவுன் ஹே' (அவள் யார்?) என்று கத்துகிறார்.


இந்த சம்பவம் அரங்கேறியபோது, என்ன நடக்கிறது என்பதை பார்க்க அக்கம் பக்கம் இருந்த பலர் அந்த இடத்தில் கூட்டமாக கூடினார்கள். 


ALSO READ | கல்யாண பொண்ணா இருந்தா என்ன? நமக்கு சாப்பாடுதான் முக்கியம்!! வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR