வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள், அதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்தியர்கள் கடின உழைப்பாளிகளாகவும் உள்ளனர். பல அசாத்திய செயல்களை மிகவும் சாதாரணமாக செய்துவிடும் திறமை நம் நாட்டவர்களுக்கு உள்ளது. 
 
இப்படி ஒரு அசாத்திய திறமையை காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு பெண் சுவரில் சாணத்தை வட்டமாக காய வைத்துக்கொண்டிருப்பது தெரிகிறது. மாட்டு சாணத்தை விறட்டியாக உலர வைக்க, அந்த பெண் அதை முதலில் வட்டமாக தட்டி, சுவரில் லாவகமாக ஒட்ட வைக்கிறார். 


மேலும் படிக்க | மழை பெஞ்சா என்ன, நமக்கு சோறு முக்கியம்: மாஸ் காட்டிய பிரியாணி பாய்ஸ்


மிகவும் நேர்த்தியான முறையில், ஒன்றன் பின் ஒன்றாக அவர் அதை செய்யும் விதம் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. மிகவும் உயரத்தில் அவர் சாணத்தை வீசினாலும், அவரது இலக்கு ஒருமுறை கூட தவறவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும். அவர் வீசும் அனைத்து சாண வட்டங்களும் சுவரில் சரியான இடத்தில் சென்று ஒட்டிக்கொள்கின்றன. 


இந்த வீடியோ-வை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இந்திய கூடைப்பந்து அணிக்கு இவர் தேவை” என்று எழுதியுள்ளார். அவர் அந்தப் பெண்ணைப் பாராட்டியதோடு அவரது இந்த திறமையை கூடைப்பந்து தேவைப்படும் வீசுதல்களுடன் ஒப்பிட்டார்.


குறி தப்பாமல் சாணியில் சாகசம் காட்டும் பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பெண்ணின் திறமையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியானது. "இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்" என்று ஒரு பயனர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளார். இவ்வளவு நேர்த்தியான ஒரு வேலையை மிகவும் அசால்டாக செய்யும் அந்த பெண்ணுக்கு இணையத்தில் புகழாரங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


மாட்டு சாணம் வறட்டிகளாக தட்டப்பட்டு, அவை கிருமிநாசினியாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, அவை பல இடங்களில் ஓமங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.


மேலும் படிக்க | Viral Video: தங்க செயினை திருடும் எறும்புகள்; எந்த IPC செக்‌ஷனில் புக் செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR