Viral Video: தங்க செயினை திருடும் எறும்புகள்; எந்த IPC செக்‌ஷனில் புக் செய்யலாம்

எறும்புகள் மிகச்சிறிய ஒரு பூச்சியினமாகும். இவை  அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும்,  தனது உடல் எடையை  விட 10 முதல் 50 மடங்கு வரை சுமக்கும் திறன் கொண்டவை என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2022, 04:02 PM IST
  • எறும்புகள் மிகச்சிறிய ஒரு பூச்சியினமாகும்.
  • அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும், தனது உடல் எடையை விட 10 முதல் 50 மடங்கு வரை சுமக்கும் திறன் கொண்டவை.
  • இந்த காணொளி இயற்கையின் அதிசயத்திற்கு தெளிவான சான்று.
Viral Video: தங்க செயினை திருடும் எறும்புகள்; எந்த IPC செக்‌ஷனில் புக் செய்யலாம் title=

இணைய உலகத்தில், தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. தினம் தினம், புதுமையான, வேடிக்கையான, அதிர்ச்சியான, திகிலான வீடியோக்கள் பலவற்றை காணலாம். உங்களால் நம்பவே முடியாத வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோக்கள் பலவற்றை காணலாம்.

ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எறும்பு ஒன்றின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

எறும்புகள் மிகச்சிறிய ஒரு பூச்சியினமாகும். இவை அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும், தனது உடல் எடையை விட 10 முதல் 50 மடங்கு வரை சுமக்கும் திறன் கொண்டவை என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... எறும்பு, குழுவாக வாழும் தன்மை கொண்டவை. இவை வியப்பூட்டும் வகையில் சமூக ஒழுக்கம்கொண்ட வாழ்வை கடைபிடிக்கின்றன். இவற்றின் இந்த ஒற்றூமையை, ஒற்றூமையின் வலிமையை பறைசாற்றும் வீட்டியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தங்கள் எடையை விட பல மடங்கு கனமான பொருட்களை குழுவாக கூடி அவை எடுத்துச் செல்லும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. எறும்புகள் ஒரு கரடுமுரடான மேற்பரப்பில் தங்கச் சங்கிலியை இழுத்துச் செல்லும் வீடியோ மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடியோவில், எறும்புகளின் கூட்டம் தங்கச் சங்கிலி இழுத்துச் செல்கிறது

இந்திய வனத்துறை அதிகாரி (IFS) சுசாந்தா நந்தா ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், கரடுமுரடான தரையில் தங்கச் சங்கிலி போல் தோன்றும் ஒரு சங்கிலியை கருப்பு எறும்புகளின் கூட்டம் ஒன்று ஊர்ந்து செல்வதைக் காட்டுகிறது. அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட நந்தா, “ மிகச்சிறிய தங்கம் கடத்தல்காரர்கள். ஐபிசியின் எந்தப் பிரிவின் கீழ் அவர்களைப் பதிவு செய்யலாம் என்பதுதான் கேள்வி?’ என பதிவிட்டுள்ளார்

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ பழையது என்பதோடு, கடந்த ஆண்டும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த காணொளி இயற்கையின் அதிசயத்திற்கு தெளிவான சான்று. ஒற்றுமையே வலிமை என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். இதுவரை 700 பேர் அதைப் பகிர்ந்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

அதில் கருத்து பதிவிட்டுள்ள “முதலில் அவர்களின் பாலினத்தை அடையாளம் காண வேண்டும். பெண்களாக இருந்தால், அது அவர்களின் உரிமையாக கருதப்பட்டு கவுரவிக்க வேண்டும். ஆண்களுக்கு, வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என பதிவிட்டுள்ளார். 

மற்றொருவர், “மைக்ரோ மூளை கொண்ட இந்த சிறிய எறும்புகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களாகிய நாம் ஒன்றுமேயில்லை எனலாம். பரஸ்பரம் தொடர்பு கொள்ளும் விதம், ஒற்றுமையாக வாழும் விதம், வேலை செய்யும் விதம், இவற்றை எல்லாம் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டும் என எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News