உடலை வில்லாக வளைத்து பம்பரமாக சுழலும் பெண் – வைரல் வீடியோ

பெண் ஒருவர் உடலை வில்லாக வளைத்து பம்பரமாக சுழலும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சாகசத்துக்கு ஆண், பெண் பேதமில்லை. திறமை இருப்பவர்கள் தங்களின் சாகசத்தை நிரூப்பிக்கலாம். அவர்களை உலகம் அங்கீகரிக்க உலகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்று திறமையை நிரூபித்தால் மட்டுமே தங்களுடைய திறமைக்கு உலக அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக நினைத்த காலம் மலையேறிவிட்டது. அதற்காக ஒலிம்பிக் போட்டியை குறைத்துக் கூறவில்லை. ஒலிம்பிக் போன்ற உலக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட, தங்களின் திறமையை உலகறியச் செய்ய முடியும்.
மேலும் படிக்க | பகீர் தகவல்! பெண்ணின் அந்தரங்க பகுதியில் 4 வருடங்களாக சிக்கியிருந்த கண்ணாடி துண்டு!
அது எப்படி? என கேட்கிறீர்களா. சோஷியல் மீடியா வளர்ச்சிக்குப் பிறகு திறமைசாலிகளுக்கு உலக அங்கீகாரம் என்பது எளிதான ஒன்றாகிவிட்டது. இந்தியாவின் ஏதோ மூலை முடுக்கில் வித்தியாசமான திறமை கொண்டிருப்பவர், சீனாவில் இருக்கும் உலகப் பெரும் புகழ் நடிகர் ஜாக்கிஜானை வியக்க வைக்க முடியும். அமெரிக்காவில் இருக்கும் அர்னால்டை திரும்பி பார்க்க வைக்க முடியும். நீங்கள் திறமைசாலிகள் என்றால் சோஷியல் மீடியா உங்களுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தர எப்போதும் ரெடியாக இருக்கிறது.
அந்தவகையில், அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர் தன் உடலை வில்லாக வளைப்பது மட்டுமின்றி, மின்னல் வேகத்தில் பம்பரம் போல் சுழல்கிறார். ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் கற்றுத் தேர்ந்திருக்கும் அவர், தன்னுடைய அசாத்திய திறமையால் பார்வையாளர்களை வியக்க வைக்கிறார். அவரின் வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி, நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR