Lion vs Buffalo, எதிர்பாராததை எதிர்பாருங்கள்: பிக் பாஸ் வீடு மட்டுமல்ல, காட்டிலும் அதேதான்

Animal Fight Video: ஒரு சிங்கம் அதன் இரையைப் பின்தொடர்ந்தால், அதை அடையாமல் விடாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சிங்கம் தன் இரையை விட்டுவிட்டு ஓடிப்போகும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2022, 05:26 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும்.
Lion vs Buffalo, எதிர்பாராததை எதிர்பாருங்கள்: பிக் பாஸ் வீடு மட்டுமல்ல, காட்டிலும் அதேதான் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும். சில நேரங்களில் இரண்டு விலங்குகள் காட்டின் நடுவில் ஒரு அபாயகரமான சண்டையில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம். 

இந்த விலங்குகள் சில சமயம் பாசத்தையும் சில சமயம் பகையையும் வெளிக்காட்டுகின்றன. பொதுவாக நாம், சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை எப்போதும் ஆக்ரோஷமான பாணியிலேயே பார்த்துள்ளோம். 

ஒரு சிங்கம் அதன் இரையைப் பின்தொடர்ந்தால், அதை அடையாமல் விடாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சிங்கம் தன் இரையை விட்டுவிட்டு ஓடிப்போகும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. பல சிங்கங்கள் எருமை மாடுகளின் கூட்டத்துக்கு முன்னால், தங்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Crocodile Attack Video: முதலைக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்க்கும் ஜெண்டில்மேன்! வைரலாகும் வீடியோ 

எருமை சிங்கத்தை துரத்துகிறது

வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், காட்டுக்குள் சிங்கத்தை துரத்திச் செல்லும் ஒரு எருமைக் கூட்டத்தைக் காண முடிகின்றது. முதலில் பல சிங்கங்கள் சேர்ந்து ஒரு எருமையைச் சுற்றி வருவதை காண்கிறோம். ஆனால் அடுத்த நொடியே எருமைக்கூட்டம் சிங்கங்கள் மீது பாய்கிறது. 

திடீர் தாக்குதலால், சிங்கங்கள் பீதியடைந்து, வாலை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடுகின்றன. ஒற்றுமையாக இருந்தால் எந்த பெரிய பிரச்சனையும் வராது என்ற பாடத்தை இந்த வீடியோ அனைவருக்கும் அளிக்கின்றது. 

காட்டு விலங்குகள் மனிதனுக்கு பாடம் கற்பிக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@nature27_12)

இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க முடியாது

காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து சமூக வலைதளவாசிகள் எருமை மாடுகளின் ஒற்றுமையை பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News