Animal Video: கடற்கரையில் இனப்பெருக்கம் செய்யும் வீடியோ! சமூக ஊடகங்களில் வைரல்
Odisha Olive Ridley Sea Turtles: ஆமைகளின் இனப்பெருக்க சீசன் இது... ஒடிசா கடற்கரையை நோக்கி லட்சக்கணக்கில் குவியும் ஆமைகள், தோராயமாக ஆறு லட்சம் ஆமைகள் கடற்கரையில் ஒன்று கூடின
Mass Nesting At Odisha: ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியில் உள்ள ரிஷிகுல்யா கடற்கரையில் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும், இந்த ஆண்டு வழக்கத்திற்கு அதிகமாக ஆறு லட்சம் முட்டைகளை ஆமைகள் இட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.. இவற்றை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினரும், தன்னார்வலர்களும் முட்டைகளை சேமித்து வைப்பார்கள்.
ஆமைகளின் முட்டையிலிருந்து 45 நாட்களுக்கு பிறகு இயற்கையாக குட்டி ஆமைகள் வெளிவரும். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. இந்த வீடியோவை தனது தனிப்பட்ட பகிர்ந்துள்ள இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, ஆமைகளை வரவேற்றுள்ளார்.
பிரபல வலைப்பதிவர் சுசாந்தா நந்தா, ஒடிசா அதன் வருடாந்திர விருந்தினர்களை வரவேற்கிறது என்றும், ருஷிகுல்யா ரூக்கரியில் ஆலிவ் ரிட்லி ஆமை பெருமளவில் கூடி முட்டையிடத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பகல் நேரத்தில் நடக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ருஷிகுல்யா கடற்கரைப் பகுதியில் 6.37 லட்சம் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் வெகுஜனக் முட்டையிடுதல் சமயத்தில் வந்து சேர்த்தன, அது, இதற்கு முந்தைய சாதனையான 5.5 லட்சம் என்பதை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பெர்ஹாம்பூர் பிரதேச வன அதிகாரி சன்னி கோக்கர், போடம்பெட்டா பிராந்தியத்திற்கு அருகில் முட்டையிடுவதற்கான புதிய கடற்கரைகளின் மேம்பாட்டு முயற்சிகளால், பிப்ரவரி 23 முதல் மார்ச் 2 வரை 6.37 லட்சம் ஆமைகள் வந்தன என்று தெரிவித்தார். இது இந்த ஆண்டு ஆமைஒகள் முட்டையிடும் நேரம் ஆகும்.
இந்த ஆண்டு, சூறாவளி, பலத்த மழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் இல்லாததால் கடற்கரைகள் பாதிக்கப்படாமல் இருந்தன. கடந்த ஆண்டு, 5.5 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வெகுஜனக் முட்டையிடுதல்களுக்காக ருஷிகுல்யாவுக்கு வந்திருந்தன.
மேலும் படிக்க | உலகின் மிக ‘உயரமான’ ATM எங்கிருக்கிறது தெரியுமா!
மார்ச் 2 க்குப் பிறகு ஆமைகள் கடற்கரைக்கு வருவதால், ருஷிகுல்யா முகத்வாரத்திற்கு வரும் ஆலிவ் ரிட்லீஸின் உண்மையான எண்ணிக்கை உயரும். மார்ச் 2 க்குப் பிறகு காணப்பட்ட இங்கு அவ்வப்போது வந்து சென்ற ஆமைகளின் எண்ணிக்கையை தற்போது கணக்கிட்டு வருகிறோம்," என்று பெர்ஹாம்பூர் பிரதேச வன அதிகாரி சன்னி கோக்கர் கூறினார்.
ஆமைகளின் இறப்பைத் தடுப்பதற்காக வனப்பகுதி அதிகாரிகள் கன்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஆலிவ் ரிட்லி எப்படி முட்டை போடுகிறது?
ஆலிவ் ரிட்லி ஆமைகள் தங்கள் முன் ஃபிளிப்பர்களுடன் மணலில் குழி தோண்டும். இந்த பணி மணிநேரம் நீளும். அவை தங்கள் பின்னங்கால்களைப் பயன்படுத்தி ஒரு குழியை உருவாக்கி, அந்த மணற்குழியில் ஒரே நேரத்தில் ஏராளமான முட்டைகளை இடுகிறது,
பின்னர் அந்த மணற்குழியை, ஆமைகள் மீண்டும் மணலால் மூடிவிடுகின்றன. 40-60 நாட்களுக்குப் பிறகு முட்டைகள் பொரிந்து குஞ்சு வெளிவரும், பின்னர் பகல் நேரத்திற்கு சற்று முன் கடலுக்கு புறப்படும் காட்சிகளும் பார்க்கவே பரவசமாக இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், குஞ்சுகள் முட்டைகளின் மேற்பரப்பை உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ