நெட்டிசன்கள் பொழுதுபோக்குக்காக சமூக ஊடங்கங்களில் புது புது வீடியோக்கள், புகைப்படங்கள், மீம்கள், சினிமாக்கள் போன்றவை வைரலாக்கி வருவார்கள்  இதில் மீம்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரு சின்ன விஷயத்தை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க மீம்கள் பெரிதும் உதவுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை, எல்லோரையும் கிண்டல் செய்யவும், விமசனம் செய்யவும்  மீம்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. தான் இன்றைய சமூக ஊடகங்களை மீம்கள் ஆட்சி செய்கிறது. நெட்டிசன்கள் தினமும் ஆயிரக்கணக்கான மீம்களை உருவாக்கி வருகின்றனர்.


மீம்களில் மிக பிரபலமான கதாபாத்திரமாக சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் மிக முக்கியமானது “டாகி மீம்” என்று அழைக்கப்படும் நாய் புகைப்படம் கொண்ட மீம்கள் தான்.  மீம்களில் பயன்படுத்திய குறிப்பிட்ட ஒரு நாய் புகைப்படம் சமீப காலமாக  முக்கிய மீம் கன்டென்ட்டாக மாறியுள்ளது. இந்த நாய் புகைப்படம் கொண்ட மீம்களில் உலா வரும் நாயின் உண்மையான பெயர் கபோசு (Kabosu). 


ஜப்பானை சேர்ந்த ஒருவர் 2008ம் ஆண்டு இந்த நாயை மீட்டு தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், 2010ம் ஆண்டு இதன் உரிமையாளர் கபோசுவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது இதனுடைய மிக அழகான போஸ்கள்  நாயின் படத்தை எல்லா மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்த தொடங்கினர்.


மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!


டோக் மீம் என மீம் கிரியேட்டர்களின் செல்ல பிள்ளையாக வலம் வந்த கபோசு இறந்து விட்டது. மே 24 அன்று காலை 7:50 மணியளவில் கபோசு "ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டார்" என்று கபோசுவின் உரிமையாளர் சோகமான செய்தியை அறிவித்தார்.


கபோசுவின் புகழ் 2010 இல் தொடங்கியது, அவரது படங்கள் ஆன்லைனில் வைரலான நிலையில், 2013ம் ஆண்டில் கபோசுவின் படத்தை அதன் லோகோவாகப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoinஐ உருவாக்கத் தூண்டியது. ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவையாகக் கருதப்பட்டது, Dogecoin இன் வெற்றி பல நாய்-கருப்பொருள் கொண்ட கிரிப்டோகரன்சிகளை உருவாக்கத் தூண்டியது.


கடந்த ஆண்டு ஏப்ரலில், எலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை சிறிது நேரத்திற்கு கபோசுவின் படமாக மாற்றினார், இதனால் Dogecoin மதிப்பு உயர்ந்தது. மஸ்க் கிரிப்டோகரன்சியின் வெளிப்படையான ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


2022ம் ஆண்டுக்  கபோசுக்கு சோலாங்கியோஹெபடைடிஸ் மற்றும் நாள்பட்ட லிம்போமா லுகேமியா இருப்பது கண்டறியப்பட்டது. அவரது மறைவு நினைவு ஆர்வலர்களுக்கும் கிரிப்டோகரன்சி சமூகத்திற்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ