தற்போது வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, உத்திர பிரதேட்சம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோடையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல பகுதிகளில் வெப்ப நிலை 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) வடமேற்கு சமவெளிகளான டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மே 25 வரை வெப்ப அலை அல்லது கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் மணல் மிகவும் சூடாக இருப்பதால், அதில் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் அப்பளத்தை சுடுவதைக் காணலாம்
வைரலாகி வரும் ராணுவ வீரரின் வீடியோவில் இருந்து, பாலைவனத்தில் 45 டிகிரி வெப்பத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த 48 வினாடி வீடியோவில், BSF வீரர் ஒருவரைக் காணலாம். கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, தொப்பி, கண்ணாடி அணிந்துள்ளதோடு, வாயையும் துணியினால் கட்டிக் கொண்டுள்ளார். அவர் சூடான மணலில் ஒரு அப்பளத்தை வைத்து, அது சுடப்படும் வரை காத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து, அவர் அப்பத்தை எடுத்து, அது சுடப்பட்டிருப்பதைக் காட்ட அதனை உடைத்து காண்பிக்கிறார். சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற கடுமையான வெயிலிலும் நம் ராணுவ வீரர் உறுதியாக நின்றதற்காக மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | ஓய்வு பெற்ற இந்திய ராணுவ நாய்க்கு கிடைத்த ராஜமரியாதை... பாராட்டும் நெட்டிசன்கள்..!!
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்
VIDEO | A Border Security Force (BSF) jawan roasts 'papad' in the sand in #Bikaner, Rajasthan. Bikaner has been reeling under intense heatwave with temperatures touching 45 degrees Celsius.
(Source: @BSF_India) pic.twitter.com/DPOGHDJDVz
— Press Trust of India (@PTI_News) May 22, 2024
இந்த வீடியோ இணையத்தில் வைரலானவுடன், பலரும் அதை பகிர ஆரம்பித்தனர். வீடியோவைப் பகிரும்போது, ஒரு பயனர் "ராஜஸ்தானின் பிகானேரில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. எல்லையில் மணல் உலை போல் எரிகிறது, ஆனால் எங்கள் வீரர்கள் உறுதியாக நிற்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "எங்கள் வீரர்களுக்கு சல்யூட்! ராஜஸ்தானின் பிகானேரில் இவ்வளவு வெயிலிலும் பணியில் இருக்கிறார்கள். எல்லையில் பணியமர்த்தப்பட்ட BSF வீரர் மணலில் அப்பளத்தை சுடுவதை வைத்து அங்கிருக்கும் வெப்பத்தை அறிந்து கொள்ளலாம். ஜெய் ஹிந்த்!" வீடியோவைப் பார்த்த பிறகு, ஒரு பயனர் எழுதினார், "ராஜஸ்தானின் மேற்குப் பகுதி - கங்காநகர், பிகானேர், ஜெய்சல்மர் மற்றும் பார்மர், ஆகிய பகுதிகள் BSF படையினாரால் பாதுகாக்கப்படும் வெப்பமான மற்றும் கடினமான பகுதி. இங்கு வானிலை மற்றும் நிலப்பரப்பு மிகவும் கடினம். BSF "பாலைவனத்தின் பாதுகாவலர்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: சும்மா இருக்கும் குரங்கை சீண்டிய பாம்பு... பாடம் கற்பித்த குரங்கு..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ