புதுடெல்லி: ஒரு கலைஞரின் இதயமும் மனமும் ஒரு விஷயத்தை எண்ணிவிட்டால், அவர் அதை எப்படியும் செய்து முடித்து விடுகிறார். நாம் வழக்கமாக கற்பனை கூட செய்து பார்க்காத விஷயங்களை ஓவியர்கள் தங்கள் கேன்வாஸில் கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் பிரிட்டனின் கலைஞர் ஸாசா ஜாஃப்ரி உலகளவில் பிரபலமாகி விட்டார். எப்படி என்பதை இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸாசா உலகின் மிகப்பெரிய ஓவியத்தை தீட்டினார்


பிரிட்டிஷ் கலைஞர் ஸாசா ஜாஃப்ரி உலகின் மிகப்பெரிய ஓவியத்தை (Painting) உருவாக்கி உலக சாதனைகளின் பதிவில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த ஓவியத்தின் அளவு 6 டென்னிஸ் கோர்ட்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கேன்வாஸ் மிகப் பெரியது, அதில் 6 டென்னிஸ் போட்டிகளை விளையாட முடியும். ஸாசா இதை 17 ஆயிரம் 176 சதுர அடியில் உருவாக்கியுள்ளார். இதை உருவாக்க ஸாசா கடுமையாக உழைத்தார்.



ALSO READ: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட் இலவசம்!


அழகான ஓவியம் கோடிகளில் விற்கப்பட்டது


இந்த ஓவியத்தை பிரெஞ்சு தொழிலதிபர் ஆண்ட்ரே அப்தோன் ரூ .450 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த ஓவியம் 'மனிதநேயத்தின் பயணம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பெறப்பட்ட பணம் தேவையில் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த அற்புதமான கலைப்படைப்பைக் காண மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள்.


6300 லிட்டர் வண்ணப்பூச்சுடன் செய்யப்பட்ட ஓவியம்


இந்த ஓவியத்தை உருவாக்குவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இதை உருவாக்க ஸாசா 70 பிரேம்களைச் சேர்த்தார். அதன் பிறகு அதில் தன் கலைத்திறமையைக் காட்டினார். இது மட்டுமல்லாமல், 1065 பெயிண்ட் தூரிகைகள் மற்றும் 6300 லிட்டர் பெயிண்டு ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டன.


ALSO READ: Condom Stuck in Woman Lungs: பெண்ணின் நுரையீரலில் ஆணுறை, மருத்துவர்கள் அதிர்ச்சி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR