கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்தவகியில் தற்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனாலும் சில மக்கள் இன்னும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களிடம் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த Krispy Kreme என்ற நிறுவனம் ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் டோனட் (Doughnut) இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.,
ALSO READ | Sputnik V தயாரிக்கும் பெங்களூரு நிறுவனம்; COVID தடுப்பூசி உற்பத்தி மையமாக மாறும் இந்தியா
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், தடுப்பூசி அட்டையை காண்பித்து இலவச டோனட்டை பெற்றுச்செல்லலாம். ஆண்டு முழுவதும் இந்த சலுகையை வழங்க முடிவெடுத்துள்ளோம். அமெரிக்கா (America) முழுவதும் உள்ள எங்களது அனைத்து கடைகளிலும் இந்த சலுகை உண்டு.
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி் கொண்டால் நாடு பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆனால் தடுப்பூசி செலுத்தி் கொள்வது மக்களின் தனிப்பட்ட முடிவு. எனவே கொரோனா தடுப்பூசி (Coronavirus) செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் மார்ச் 29 முதல் மே 24 வரை திங்கட்கிழமைகளில் இலவச டோனட்டும், காபியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR