நாட்டில் போக்குவரத்து விதிகளை எல்லாம் இன்னும் பலபேர் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. நாம் போகும் திசையில் வண்டியை ஓட்டலாம், எதிர் திசையில் வருபவர்கள் பார்த்து வரட்டும் என்கிற நினைப்பிலேயே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். விபத்து ஏற்பட்டால் நாமும் தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் அல்லது பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதனால் தான் உலகில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலையில் யார் தவறு செய்தாலும் விபத்து ஏற்பட்ட பிறகு இரு தரப்புமே பதில் சொல்லியாக வேண்டும். ஒருவேளை உங்கள் மீது தவறு இல்லை என்றால் கேமரா இருந்தால் மட்டுமே அதை நிரூபிக்கவும் முடியும்.  அப்படி தவறான திசையில் சாலையில் வேகமாக வந்த ஒரு தம்பதி, எதிர் திசையில் வந்த கார் மீது வேகமாக மோதி கீழே விழும் வீடியோ வெளியாகியுள்ளது. காரில் வந்தவரிடம் கேமரா இருந்ததால், அதில் விபத்து காட்சி தெளிவாக பதிவாகியிருக்கிறது. விபத்துக்கு தான் காரணமில்லை என்பதையும் அவரால் நிரூபிக்க முடிந்திருக்கிறது. 


மேலும் படிக்க | தலைக்கு தில்ல பாத்தியா..சிங்கத்திடம் வீண் வம்பு செய்த குள்ள நரி: வீடியோ வைரல்


அந்த வீடியோவில், நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு நபர் கார் ஓட்டி கொண்டு வருவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அந்த காருக்கு எதிர் திசையில், அதாவது ராங் சைடில், 2 டூவீலர்கள் வருகின்றன. அந்த டூவீலர்களை ஓட்டியவர்களுக்கு, ராங் சைடில் பயணம் செய்கிறோம் என்ற அச்சம் கொஞ்சம் கூட இருந்ததை போல் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் வேகத்தை குறைக்கவும் இல்லை. சரியான திசையில் வந்த காருக்கு வழிவிடவும் இல்லை. நேராக காரை நோக்கியே டூவீலரை ஓட்டி வந்தனர்.


பின்னர், ஒரு டூவீலர், காரின் மீது மோதியது. அந்த டூவீலரின் பின் பகுதியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. காரின் மீது மோதியவுடன், அந்த டூவீலரை ஓட்டியவரும், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் டூவீலரை ஓட்டிய நபர் ஹெல்மெட் (Helmet) அணிந்திருந்ததால் தப்பித்தார். பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாத அந்த பெண் கார் மீது விழுந்து கீழே இறங்கினார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை.



ஏனெனில் விபத்தில் சிக்கிய நபர் மீண்டும் எழுந்து டூவீலரை தள்ளி கொண்டு செல்வது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. டூவீலர் ராங் சைடில் வந்ததுதான் இந்த விபத்திற்கு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. சில அடி தூர பயண தொலைவை எளிதாக கடக்க வேண்டும் என்பதற்காக ராங் சைடில் செல்லும்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து விழிப்புணர்வு இல்லாவிட்டால் ஆபத்துகளையும் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | டெஸ்லா காரில் தெரிந்த பேய்... அரண்டுபோன பயணிகள்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ