கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் பல வித்தியாசமான சோகத்திற்குரிய சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் முதல், 50 வயது கூட ஆகாத ஆண்கள் வரை பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு திருமண விழாவில் நடனமாடி கொண்டிருந்த ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து உடற்பயிற்சி கூடத்தில் வர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது சில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணங்களுக்கு காரணம் புரியாமல் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது ஆந்திராவிலும் நிகழ்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழா:


இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா சமீபத்தி நடந்தது. இதனை இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் விமர்சையாக கொண்டாடினர். ஆந்திராவில் உள்ள தர்மாவரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா நடைப்பெற்றது. இந்த விழா, மேள தாளங்கள், ஆட்டம் பாட்டம் என பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இதில் ஆடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர்தான் யாரும் எதிர்பாராத வகையில் உயிரிழந்துள்ளார். 


மேலும் படிக்க | கொஞ்சோ கொஞ்சுனு கொஞ்சும் நாய்.. கொடுத்துவைத்த நபர்: செம க்யூட் வைரல் வீடியோ


திடீரென மயங்கி உயிரிழப்பு..


அந்த இளைஞர் விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



இதில் அந்த விழாவில் இரண்டு இளைஞர்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு இளைஞர் கையில் வேப்பிலையை வைத்துள்ளார். பரவச நிலையில் விநாயகரின் பாடலுக்கு இவர்கள் நடனமாடுகின்றனர். நடனமாடுபவர்களில் கையில் வேப்பிலையுடன் நடனமாடும் இளைஞர் திடீரென மயங்கி கீழே விழுகிறார். பின்னர் பதறி போய் அனைவரும் அவரை தூக்க ஓடுகின்றனர். இப்படியாக இந்த வீடியோ முடிகிறது. 


உயிரிழப்பிற்கான காரணம்..


இறந்த இளைஞரின் பெயர் பிரசாத். இவருக்கு 26 வயது ஆகிறது. இவர் மயங்கி விழுந்தவுடன் உடன் இருந்தவர்கள் இவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பேரிடர், ஊரங்கிற்கு பிறகு இது போன்ற பல சம்பவங்கள், நம் நாட்டில் நடந்து விட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ