Zomato-வில் உணவு விநியோகம் செய்யும் மாற்றுத்திறனாளி ராமு: வைரலாகும் வீடியோ
சொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளியான ராமு-வை `சூப்பர் ஹீரோ` என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
புது தில்லி: சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. சொமேட்டோ (Zomato) ஊழியர் வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்வதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சொமேட்டோ ஊழியரை "சூப்பர் ஹீரோ" என்று சமூக வலைத்தளங்களில் அனைவரும் அழைக்கின்றனர். சொமேட்டோ நிறுவனம் கூட அவரை பெரிதும் பாராட்டி உள்ளது. உணவு விநியோகம் செய்யும் ஒரு நபர் எப்படி சமூக ஊடங்களில் பேச்சு பொருளாக மாறினார் என்பதை பார்ப்போம்.
அதாவது, வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்யும் சொமேட்டோ ஊழியர் ராமு, ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அவர் கையால் இயக்கக்கூடிய மூன்று சக்ர வண்டியில் அமர்ந்தப்படி, அதன் மூலம் வாடிக்கையாளருக்கு உணவு விநியோகம் செய்யும் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மாற்றுத்திறனாளியான ராமு உணவு விநியோகம் செய்யும் காட்சியை ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்தவர்கள் ராமுவின் செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் சொமேட்டோ (Zomato) நிறுவனத்துக்கும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை போல மற்ற நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.