ஈஸியா உங்க வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்ய சில டிப்ஸ்!
தற்போது இளம் வயதினரிடையே தலைவிரித்தாடும் டிரென்ட்-ஆக இருப்பது ஹேர் கலரிங். இத வீட்டிலேயே செய்ய சில டிப்ஸ் -உள்ளே!
தற்போது இளம் வயதினரிடையே டிரென்ட்-ஆக இருப்பது ஹேர் கலரிங் செய்வது. ஆனால், ஹேர் கலரிங் அழகு நிலையத்தில் பொய் செய்தால் பணம் மற்றும் நேரம் அனைத்தும் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாகம் இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும்.
இவற்றை பயன்படுத்தினால் தலைமுடி வண்ணமாக மாறுவதுடன் தலை முடி இல்லா மொட்டை தலையாகவும் வாய்புகள் அதிகம். எனவே, நாம் நேரம் மற்றும் பணம், தலை முடி ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு ஹேர் கலரிங் செய்யலாம்.
வீட்டிலேயே எப்படி ஹேர் கலரிங் பண்ணுறது அப்டின்னு உங்களுக்கு குழப்பத்துல இருக்குறவங்களா நீங்க' கவலையே வேண்டாம். எந்த பின்விளைவுகளும் இல்லாத மாதரி உங்க கூந்தலை அழகா ஹேர் கலரிங் செய்யுறதுக்கு இதோ சில டிப்ஸ்...!
வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்ய தேவையான பொருள்....!
ஹென்னாவுடன் (மருதாணி பொடி) - 50 கிராம்.
தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் - 50 மி.லி.
டீ டிகாஸன் - அரை டம்ளர்.
செய்முறை....!
ஹென்னாவுடன் (மருதாணி பொடி), தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் மற்றும் டீ டிகாஸன் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்துக் கொள்ளவும். அந்த கலவையை 3 மணி நேரம் அதை அப்படியே வைக்கவும்.
மூன்று மணி நேரத்திற்கு பின்னர் அந்த கலவையை தலையில் செய்தது சுமார் 2 மணி நேரம் காய வைக்கவும்.
பின்னர் கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். அது மட்டுமின்றி வெறும் பீட்ரூட்டையும் கேரட்டையும் கூட நன்றாக அரைத்து தலையில் போட்டு 30 நிமிடம் வெயிலில் காய வைத்து. பின்னர் கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை அலசலாம்.
எந்த வித கெமிக்கல்களும் இல்லாத இது உங்கள் தலைக்கு ஒரு நேச்சுரல் கலரைத் தரும்.
கருமையான கூந்தலை பெற.....!
தேவையான பொருட்கள்....!
கொக்கோ தூள் (co-coa powder) - அரை கப்.
தேன் (honey) - 1 டீஸ் பூன்.
ஆப்பிள் சாறு வினிகர் (apple cider vinegar) - 1 டீஸ் பூன்.
சூடான தண்ணீர் (Warm vater) - தேவையான அளவு.
செய்முறை...!
கொக்கோ தூள், தேன், ஆப்பிள் சாறு வினிகர், சூடான தண்ணீர் மூன்றையும் சேர்த்து கலவை செய்து 10 நிமிடம் ஊரிய வைக்க வேண்டும்.
பின்னர், அந்த கலவையை தலையில் தேய்த்து சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் தலைக்கு குளித்தால் உங்கள் முடி இயற்கையான அழகை பெரும்.
இந்த முறையை நீங்கள் பின்பற்றினால் உங்கலேக்கே தெரியும் இரசாயன பொருட்களை வைத்து ஹேர் கலரிங் செய்வதை விட சிறப்பாக இருக்கும் என்பது.
மேலும் சில குறிப்புகள்....!
1. தினசரி குளிக்கும் பொது நாம் எலும்பிச்சை சாரை தேய்த்து குளித்துவந்தால் வெறும் 5 நாள்களில் நமது தலைமுடியின் நிறம் மாறும்.
2. கெமோமில் தேயிலை-யை (chamomile tea) தினசரி தலையில் குளிக்கும்போது நீங்கள் உபகோகிக்கும் ஷாம்புவுடன் தேய்த்து வந்தால் நமது தலைமுடியின் வண்ணம் மாறும்.
3. ருபார்ப் (Rhubarb) பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து தலையில் தீய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நமது தலைமுடியின் நிறம் மாறும்.
செய்து பாருங்கள்.....!