இன்று முதல் தென்மேற்கு பருவமழை துவக்கம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் வரும் மே 30-ம் தேதி வரை மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்கும் சூழ்நிலை காணப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்கள் குமரிக்கடல், லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா கடல் பகுதிகளில் மே-30 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களை அனேக இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னையில் வானம் தெரிவித்துள்ளார்.