கோடை விடுமுறையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாலிக்க தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ரயில் எண்: 82608 (சுவிதா) ஆனது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 10.06.2018 மற்றும் 01.07.2018 ஆகிய தேதிகளில் மாலை 16.00 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 08.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு ரயிலில் 3 tire AC - 3 பெட்டிகள், Sleeper - 6 பெட்டிகள், General SC - 3 பெட்டிகள், Luggage Van - 2 பெட்டிகள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த சிறப்பு ரயில் ஆனது வல்லியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாட்டூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய தடங்களில் நின்றுச் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அதேவேலையில், ரயில் எண்: 82605 (சுவிதா) ஆனது தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 14.06.2018 அன்று இரவு 22.20 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 10.00 மணியளவில் சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு ரயிலில் 3 tire AC - 1 பெட்டிகள், Sleeper - 6 பெட்டிகள், General SC - 9 பெட்டிகள், Luggage Van - 2 பெட்டிகள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த சிறப்பு ரயில் ஆனது செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய தடங்களில் நின்றுச் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது!