சனி மாகதிசை பலன்கள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் அதற்கான சிறப்பு முக்கியத்துவம் இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் சுப நிலையில் கிரகம் இருந்தால், அது அந்த நபருக்கு பல சுப பலன்களைத் தரும் என்பது ஜோதிட ஐதீகம். அதன்படி சனி பகவான் நீதியின் கடவுள் என்பதால், கர்மாவிற்கு ஏற்ற பலன்களைத் தருகிறார். சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும், ஜாதகருக்கு மோசமான பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். அதேபோல் ஒருவருக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று சனிதிசையில் புரியவைப்பார் சனிபகவான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் 27 நட்சத்திரங்களில் அடிப்படையில் ஒன்பது தசைகள் வரிசையாக நடக்கின்றன. ஒருவருக்கு ஒன்பது தசைகள் 120 ஆண்டுகள் நடந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலி. இதில் சனி மகாதிசை 19 ஆண்டுகள் நடைபெறும். அந்த ஜாதகரை 19 வருடங்கள் தனது பிடியில் வைத்திருப்பார் சனிபகவான். சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் சனிமகாதிசையில் பல நன்மைகள் நடைபெறும். எனவே சனி திசை காலத்தில் என்ன பாதிப்பு வரும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்!


இத்தகைய பலன் சனியின் மகா திசையில் காணப்படும்
ஒருவரது ஜாதகத்தில் சனி வலுப்பெற்று சுபகாரியங்கள் செய்திருந்தால் சனியின் மகாதிசையில் மகிழ்ச்சியும் மரியாதையும் கிடைக்கும். இந்த சூழ்நிலையில், பணக்கார யோகம் உண்டாகும். புகழ் மற்றும் உயர் பதவியைப் பெறுவார்கள். பல தரப்பில் இருந்து பணம் சம்பாதிக்க எளிதான வாய்ப்புகள் கிடைக்கும்.


மாறாக, ஜாதகத்தில் சனி வலுவிழந்து இருந்தால், சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். ஜாதகத்தில் சனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். அதேபோல் இந்த காலகட்டத்தில் பண இழப்பை சந்திக்க நேரிடும். வேலை மற்றும் வியாபாரத்தில் தடைகள் ஏற்படும்.


சனி மகாதிசையில் இதை செய்யுங்கள்
சனி மகாதிசையின் போது சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஜோதிட ஆலோசனையின்றி நீலநிற நீலக்கல் அணிவது சரியல்ல. போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்கவும். பெண்கள், முதியவர்கள், ஆதரவற்றோர், உழைக்கும் தொழிலாளர்களை தவறுதலாக அவமதிக்காதீர்கள்.


சனிக்கிழமை மாலை அரச மரத்தடியில் நான்கு முக தீபம் ஏற்றவும். இதற்குப் பிறகு, குறைந்தபட்சம் மூன்று முறை மரத்தை சுற்றி வரவும். 'ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌன் ஸஹ ஷனிச்சராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இதற்குப் பிறகு, ஒரு ஏழைக்கு நாணயங்களை தானம் செய்யுங்கள்.


வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு லாபம் ஈட்ட நினைத்தால், சனிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன், அரச மரத்திற்கு தண்ணீர் கொடுங்கள். அதே மாலையில் மரத்தடியில் இரும்புக் கிண்ணத்தில் பெரிய ஒற்றைமுக விளக்கை ஏற்றி அங்கேயே நின்று சனி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். பிறகு ஒரு ஏழைக்கு உணவு வழங்குங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ