இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து சிவனின் அருளைப் பெற  காத்துக் கிடக்கிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் கிடைக்க வேண்டும் என்பது தான் அன்றைய நாளில் எல்லோரும் பிரார்தனையாகவும் இருக்கும். அப்படியான அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் சிவனுக்கு விரதம் இருக்கும் நாளில் இந்த மூன்று பொருட்களை வாங்கி வைக்க தவறாதீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நந்தி சிலை


சிவபெருமானின் புனித காளையான நந்தி, அவரது தெய்வீக பரிவாரங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மஹா சிவராத்திரியில் நந்தி சிலையை வீட்டிற்குள் கொண்டு வருவது தெய்வீக அனுக்கிரகத்தைப் பெறுவதாகவும், கஷ்டங்களைத் துடைப்பதாகவும், சிவபெருமானை சாந்தப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | மகாசிவராத்திரியில் உருவாகும் சுபயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், சிவனருள் கிட்டும்


சிவலிங்கம்


வீட்டில் சிவலிங்கம் இருப்பது நிதி சிக்கல்களைத் தவிர்க்கும். மகிழ்ச்சியைத் தரும். எதிர்மறை ஆற்றல்களை அகற்றும் என்று நம்பப்படுகிறது. இந்த புனித நாளில் சிவலிங்கத்தை வழிபடும்போது பாவங்கள் நீங்கும். உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும்.


செப்பு பாத்திரங்கள்


மகா சிவராத்திரி அன்று வீட்டில் செப்புப் பாத்திரங்களை வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. தாமிரத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் தட்டுகளும் வாங்கலாம். குறிப்பாக வழிபாட்டின் போது சிவலிங்கத்திற்கு செப்பு பாத்திரங்கள் வைத்து பூஜை செய்வது சிறப்பு. 


சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களை படைக்கலாம்?


நெய்


கல் சிவலிங்கத்தின் மீது நெய் பூசுவது என்பது சிவபெருமானை சாந்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது.


பால்


பால் அபிஷேகம் செய்வது அல்லது சிவலிங்கத்தின் மீது பால் ஊற்றுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.


கருப்பு எள் விதைகள்


மகா சிவராத்திரியில் சிவபெருமானுக்கு கருப்பு எள்ளை சமர்பிப்பது முன்னோர்களை போற்றுவதாக நம்பப்படுகிறது.


ஆடை தானம்


மஹா சிவராத்திரியில் வசதியற்றவர்களுக்கு ஆடைகள் கொடுப்பது நிதிக் கஷ்டங்களைப் போக்குவதாக நம்பப்படுகிறது.


மகா சிவராத்திரியில் இந்த சடங்குகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்கும்போது தெய்வீக ஆசீர்வாதங்கள் கண்டிப்பாக கிடைக்கும். பக்தர்களுக்கு செல்வ செழிப்பான ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.


மேலும் படிக்க | Vijaya Ekadashi 2024: விஜய ஏகாதசி அன்று இந்த பொருட்களை தானம் செய்ய வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ