Rahu Durgai Vazhipadu : செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்" கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவது கிரக தோஷங்களை எல்லாம் போக்கும். எனவே ஆடி செவ்வாயில் முருகனை விரதம் இருந்து வணங்கினால் துன்பங்கள் தொலைந்தோடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்ரகாளி அன்னையே, ராகுவாக அவதாரம் செய்தாள் என்பதும் ஒரு நம்பிக்கை உண்டு. எனவே, செவ்வாய்க்கிழமையில் அதிலும் ஆடி மாத செவ்வாயில் துர்க்கை அன்னையை வழிபடுவதும், எலுமிச்சை தீபம் ஏற்றுவதும் ராகு தோஷங்களை அகற்றும். ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை மற்றும் முருகனுக்குரிய விரதமாகும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.


செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். 


பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.  பிற நாட்களில் செய்வதைவிட ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 


ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும் இருந்தாலும், செவ்வாய் நீச்சமடைந்திருந்தாலும், ஒருவருக்கு செவ்வாய் திசை நடந்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் செவ்வாய்க்கிழமை நாட்களில் விரதம் இருக்க வேண்டும்.


செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் வேண்டுபவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்று துர்க்கைக்கு நடைபெறும் பூஜைகளில் கலந்துக் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | 17 ஆண்டுகள் வெளுத்து வாங்கும் புதன் மகா திசை காலம்! யாருக்கு நல்லது? பரிகாரங்கள்!


ஒளவையார் விரதம் 
பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள். இந்த விரதம் இரவு நேரத்தில் செய்யப்படுகிறது, இந்த வழிபாட்டில் ஆண்கள் கலந்துக் கொள்ள மாட்டார்கள். விரதம் இருக்கும் பெண்கள், இரவு 10.30 மணிக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வழிபாடு செய்வார்கள்.


இந்த விரதத்தை இளம் பெண்கள் இருக்க, மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுவார்கள். ஒளவையார் விரதம் இருப்பவர்கள், பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து நிவேதனம் தயாரிப்பார்கள். இந்த ஒளவையார் விரதத்தின்போது, உணவில் உப்பு சேர்க்கக்கூடாது என்பதன் அடிப்படையில், நிவேதனமாக செய்யப்படும் இனிப்பு கொலுக்கட்டையிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள். 


ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இந்த சடங்குகள் முடிந்தபின், ஒளவையாருக்கு நிவேதனம் செய்து படைத்த உணவுகளை அனைவரும் உண்டதும் விரதம் முடிவுக்கு வரும்.  


குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முருகனுக்கு முதலில் காவடி எடுத்தது யார்? ஆடி கிருத்திகையில் பக்தனுக்கு அருள் புரியும் முருகர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ