சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு கொட்டிக்கொடுப்பார் சனி!!
Shani Vakra Nivarthi: 3 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அபரிமிதமான நற்பலன்களை அள்ளி வழங்கவுள்ளார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிகிறார். பொதுவாக அனைவருக்கும் சனி குறித்த அச்சம் இருக்கின்றது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பிரவேசித்துள்ளார். தற்போது சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு முன் சனி தனது திசையை மாற்றி நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து கிரகங்களிலும் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அபரிமிதமான நற்பலன்களை அள்ளி வழங்கவுள்ளார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனியின் வக்ர நிவர்த்தியால் ஏகப்பட்ட பரிசுகளை பெறப்போகும் ராசிகள்:
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், மிகுந்த நன்மைகள் உண்டாகும். ப்ராபர்டி சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். இவர்கள் எடுத்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். அனைத்திலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர் தனது தொழிலில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் நிதி நிலைமையின் ஏற்றம் உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வரும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
மேலும் படிக்க | கேந்திர திரிகோண ராஜயோகம்: சனியால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கிறது
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவாவின் வக்ர நிவர்த்தி அதிகப்படியான சுப பலன்களைத் தரப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் மற்றும் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் வெற்றி பெறுவார்கள். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கலாம், அது எதிர்காலத்தில் பலனைத் தரும். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதில் இப்போது அதிக லாபம் உண்டாகும்.
கன்னி ராசி
சனி பகவானின் வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இவர்கள் பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கன்னி ராசிக்காரர்களின் மாத வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தின் மொத்த பண வரவும் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒன்றாக இணையும் சனி, சூரியன், செவ்வாய்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ