மரணம் சம்பவிப்பதற்கான அறிகுறிகள்: பிறப்பும் இறப்பும் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட இரண்டு விலைமதிப்பற்ற அம்சங்கள். பிறப்பவர் இறப்பது உறுதி. உலகில் உள்ள அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்று தெரியும். ஆனால் மரணத்தை கண்டு அஞ்சாதவர் அறிது. கருட புராணம் இந்து மதத்தின் புகழ்பெற்ற ஆன்மீக நூல்களில் ஒன்றாகும். சனாதன தர்மத்தின்படி, கருட புராணம் மரணத்திற்குப் பின் சத்கதியை வழங்குகிறது. அதனால் தான் எந்த ஒரு நபர் இறந்த பிறகும் அவர் வீட்டில் கருட புராணம் கேட்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பதினெட்டு புராணங்களில், கருட மகாபுராணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் கருட புராணத்தின் தெய்வம் விஷ்ணுவாகவே கருதப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகள் கருட புராணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இது சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் குறித்த விதிகள் மற்றும் ஆன்மீகம் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நபர் தனது நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலன்களில் சிலவற்றை இந்த ஜென்மத்திலும் சிலவற்றை இறந்த பிறகும் அனுபவிக்க வேண்டும் என கருட புராணம் கூறுகிறது. பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான அனைத்து உண்மைகளையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும், அதனால்தான் ஒருவர் இறந்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே கருட புராணம் படிக்கப்படுகிறது. ஒருவரின் மரணம் நெருங்கும் போது, ​​அதற்கு முன் அவருக்கு சில அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன. அதைப் பற்றி கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!


மரணத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள்!


கருட புராணத்தின் படி, ஒரு நபர் இறப்பதற்கு முன் அவரால் தனது மூக்கைப் பார்க்க முடியாது என கூறப்படுகிறது.


மரணம் நெருங்கிவிட்டால், எண்ணெய் அல்லது தண்ணீரில் ஒரு நபர் தனது நிழலைப் பார்க்க முடியாது. அதனால்தான் மரணத்தின் போது ஒரு நபரின் நிழல் கூட அவரை விட்டு நீங்குகிறது என்று கூறப்படுகிறது.


மரணத்திற்கு முன், ஒரு நபரின் கையில் உள்ள ரேகைகள் மிகவும் தேய்ந்து விடும். சிலருக்கு கை ரேகைகள் முற்றிலும் மறைந்து விடும்.


மரணம் நெருங்குவதற்கு சற்று முன்பு, குறிப்பிட்ட நபர் தனது கனவில் சில விசித்திரமான விஷயங்களைப் பார்க்கத் தொடங்குகிறார். அதாவது அணைக்கப்பட்ட விளக்கைப் பார்ப்பது போன்றவை.


இறப்பதற்கு முன், ஒரு நபர் தன்னைச் சுற்றியுள்ள ஆன்மாக்களை உணரத் தொடங்குகிறார். உறவினன் தன்னிடம் வரப்போகிறான் என்பதற்காக முன்னோர்களின் ஆன்மாக்கள், மறுமையில் அவன் வருகையைக் கொண்டாடத் தொடங்குகின்றன.


கருட புராணத்தின் படி, மரணத்திற்கு முன், ஒரு நபரின் சுவாசம் எதிர் நிலையில் செயல்படத் தொடங்குகிறது. சில சமயங்களில் தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் பார்க்க முடியாத வகையில் வகையில் யமதூதர்கள் அவருக்கு நெருக்கமாகத் தோன்ற ஆரம்பிப்பார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ