ஆடி மாதம் பல சிறப்புகளை கொண்ட மாதம். குறிப்பாக அம்மன் வழிபாடு அதிக அளவில் நடக்கும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் செவ்வாய்கிழமைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கோயில் விழாக்கள் அதிகம் நடக்கும் ஆடி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசியில் நுழைய உள்ளார்.  சூரிய பகவான் தற்போது மிதுன ராசியில் அமர்ந்துள்ள நிலையில், ஜூலை 16, இரவு 11:08 மணிக்கு, கடக ராசிக்கு மாறுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, சனி பகவான் கும்ப ராசியில் இருக்கும் நிலையில், சூரியனின் ராசி மாற்றத்தால் இரண்டு கிரகங்களும் ஆறு மற்றும் எட்டாம் வீட்டில் அமர்வதால் ஷடாஷ்டக யோகம் உருவாகும். ஷடாஷ்டக யோகம் மிகவும் அசுப பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால், ஜாதகரின் வாழ்க்கையில் துக்கம், கவலை, நோய்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. இந்த முறை ஷடாஷ்டக யோகம் உருவாக இருப்பதால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேஷம்: ஆடி மாத பலன்கள்


செலவுகள் அதிகரிப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். நிதி நிலை பாதிக்கப்படும். இது தவிர திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். குறிப்பாக நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட நேரிடும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம், யோக பயிற்சிகளை செய்வது நல்லது.


ரிஷபம்: ஆடி மாத பலன்கள்


உத்தியோகத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகள் அதிக்ரிக்கலாம். நண்பர்கள் என்று நம்பியவர்கள் கூட முக்கியமான வேலையில் தடைகளை உருவாக்குவதில் வெற்றி பெறுவார்கள். வேலை அழுத்தம் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும், இதன் காரணமாக ஆரோக்கியமும் பாதிக்கப்படக் கூடும். காதல் உறவில் இருப்பவர்களிடையே பதற்றம் ஏற்படலாம்.


மேலும் படிக்க | இஷ்டப்பட்டு கஷ்டப்பட வைக்கும் ராகு! கஷ்டத்தை கொடுத்து வாழ்க்கையை உணர்த்தும் நிழல் கிரகம்!


தனுசு: ஆடி மாத பலன்கள்


குடும்பத்தில் உறவுகள் மோசமடையக்கூடும், இதன் காரணமாக பதற்றம் இருக்கும். வாழ்க்கையில், சுகபோகங்கள் மற்றும் ஆடம்பரங்கள் குறையும். நிதி நிலை பாதிக்கப்படும். அதன் காரணமாக உடல்நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் நண்பர்களுடன் கெட்ட சகவாசத்தில்  மாட்டிக் கொள்ளக் கூடும். இது  பெற்றோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


கும்பம்: ஆடி மாத பலன்கள்


உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். தடைகளை சமாளிக்க சிரமப்படுவார்கள். ஆரோக்கிய விஷயங்களிலும் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். மாணவர்கள் கவன சிதறலால பாதிக்கப்படுவார்கள். தைரியமின்மையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில், தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.


மீனம்: ஆடி மாத பலன்கள்


உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள் பணிச்சுமையால் சிரமப்படுவார்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த விரும்பிய லாபம் கிடைக்காது. இதன் காரணமாக  ஏமாற்றமடைவார்கள்.  மன அழுத்தமும் அதிகரிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படலாம். நண்பர்கள் பிரச்சனைக்கு காரணமாக இருப்பார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ