After 12 Years Jupiter in Rohini Nakshatram:  ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக கொண்டே இருக்கும். அத்தகைய மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நட்சத்திர பெயர்ச்சி அடைந்தார். இந்த பயணமானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இருக்கும். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வானது மிகவும் சுப மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அனைத்து வேளையிலும் வெற்றி பெறுவார்கள். எனவே குரு நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் மாதம் வரை சூப்பராக இருக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம் (Taurus Zodiac Sign): குரு ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளது ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலனைத் தருகிறது. இந்த நேரத்தில் தன்னம்பிக்கை அதிகரிதது, பணிகளை தைரியமாக முடிப்பீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். குடும்பத்தாரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். சமூக மரியாதை உயரும். திருமண நிச்சயிக்கப்படலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்த சரியான நேரம், லாபம் பெருகும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறலாம்.


மேலும் படிக்க | உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!


சிம்மம் (Leo Zodiac Sign): ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைந்திருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழிலை தொடங்கலாம், இதனால் தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். சொந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை வாய்ப்பு உங்களைத் தேடி வரும். தந்தையுடனா உறவு சிறப்பாக இருக்கும்.


தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைந்துள்ளாதயால் அனுகூலமாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயத்தை பெறுவீர்கள். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். வங்கி இருப்பு இரட்டிப்பாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், புதிய நபர்களை சந்திப்பீர்கள், அவர்களால் எதிர்காலத்தில் ஆதாயம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ