சந்திரன்-குரு சேர்க்கை: 48 மணிநேரத்திற்குப் பிறகு இந்த ராசிகளுக்கு பண மழை
Chandra-Guru Yuti: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. ஜூலை 10 ஆம் தேதி சந்திரனும், குருவும் ஒரே ராசியில் சந்திப்பதால், இரு கிரகங்களின் சேர்க்கை நடைபெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பு நிதி பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சந்திரன்-குரு சேர்க்கை பலன்கள் 2023: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழைகிறது என்று கூறப்படுகிறது. அனைத்து கிரகங்களிலும் சந்திரன் மிகக் குறுகிய காலத்தைக் கொண்டுள்ளது. அந்தவகையில் இன்னும் இரண்டு நாட்களில் சந்திரன் தனது ராசியை மாற்றுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஜூலை 10 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். குரு ஏற்கனவே மேஷ ராசியில் அமர்ந்திருப்பதால் சந்திரனுடன் கூட்டணி அமைக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஏதேனும் இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் சந்திப்பது சுப மற்றும் அசுப பலன்களைத் தரும். குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுப பலன்கள் அடையப் போகிறது. இது அந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பலனளிக்கும். அதுமட்டுமின்றி அவர்களது குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி திரும்பும். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இன்று முதன் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை... தலைவிதி மாறும்
சந்திரன்-குரு சேர்க்கையால் இன்னும் 48 மணிநேரத்தில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்
மேஷம்
மேஷ ராசியின் 1 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் நல்ல பலன் மேஷ ராசிக்காரர்களுக்குக் காணப்படும். இதுமட்டுமின்றி அனைவரின் செயற்பாடுகளிலும் இக்காலகட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரத்தில், வணிகர்களின் வாழ்க்கையில் வெற்றியின் காலம் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், மனதை அமைதியாக வைத்து, அதன் பிறகுதான் எந்த வேலையாக இருந்தாலும் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள், வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய தொழிலைத் தொடங்கினால், அது வெற்றிகரமாக நடக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் மேஷ ராசியில் நுழைவதாலும், குருவுடன் இணைவதாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் உறவு தொடர்பான பதற்றம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும் மற்றும் பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ராசியில் உருவாகும் இரண்டு கிரகங்களின் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் மிகவும் உகந்ததாக அமையும். இந்த நேரத்தில் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். மறுபுறம், நீங்கள் எந்த மதப் பணியிலும் தொடர்புடையவராக இருந்தால், அந்த வேலையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் வீட்டு வேலைகளைச் செய்து முடிக்க உதவுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 7 வரை பண மழை கொட்டும், தொழிலில் லாபம் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ