சுக்கிரன் பெயர்ச்சி: இன்று முதன் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை... தலைவிதி மாறும்

Venus Transit: சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரம் வலுவான பலன்களை அளிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2023, 04:25 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும்.
  • உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம்.
  • வருமானம் அதிகரிக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இன்று முதன் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை... தலைவிதி மாறும் title=

சிம்மத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு முக்கிய அம்சமும் பண்பும் உள்ளது. ஒவ்வொரு கிரகமும் சில குணங்களுக்கான காரணிகளாக விளங்குகின்றன. அந்த வகையில் உலக மகிழ்ச்சி, அன்பு, அழகு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் இருக்கிறார். உலகத்தின் பல வித மகிழ்ச்சிகள் மற்றும் வெற்றிகளுக்கான அம்சமாக சுக்கிரன் கருதப்படுகிறார்.

பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதே போல, சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சுக்கிரனுன் மாற்றத்தால் மக்களின் பொருளாதார நிலை, உடல் ரீதியான மகிழ்ச்சி, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்றவற்றில் பெரும் தாக்கம் ஏற்படுகின்றது. ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால், அந்த நபர் ஒரு ராஜாவைப் போல வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார். அவருக்கு அனைத்து விதமான மகிழ்ச்சியும், மரியாதையும், அன்பும் கிடைக்கும். 

இன்று, அதாவது ஜூலை 7, 2023 வெள்ளிக்கிழமை அன்று, சிம்ம ராசியில் சுக்கிரன் கிரகத்தின் பெயர்ச்சி நடக்கிறது. சூரியனின் ராசியான சிம்மத்தில் சுக்கிரன் நுழைவது குறிப்பிடத்தக்க பலனைத் தரும். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரம் வலுவான பலன்களை அளிக்கும். 2023 ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை சுக்கிரன் இந்த ராசியில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு பணம், பதவி, மரியாதை என அனைத்தையும் தருவார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சுக்கிரன் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

ரிஷப ராசி: 

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீடு, வாகனம் வாங்கலாம். மூதாதையர் சொத்து சம்பந்தமான அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடந்து முடியும். வருமானம் அதிகரிக்கும், புதிய ஆதாரங்களால் பணப் பலன் கிடைக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். இது உங்கள் பழைய பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை நீக்கும். காதல் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 7 வரை பண மழை கொட்டும், தொழிலில் லாபம் கிடைக்கும்

கடக ராசி: 

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாட்களாக ஒருவரிடம் சிக்கி இருந்த பணத்தை இப்போது திரும்ப பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் அனைத்து வேலைகளையும் நன்றாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி: 

சுக்கிரனின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கும் மிகவும் சுப பலன்களைத் தரும். உங்கள் வீட்டில் பல மகிழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். பண்டிகை காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்திலும் லாபம் உண்டாகும். நீண்ட காலமாக நடக்காமல் இருக்கும் பணிகள் நடந்து முடியும். இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். நீங்கள் வெளிநாட்டு பயணமும் செல்லக்கூடும். இந்த பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி, சிவன் சேர்க்கை..அபூர்வ யோகம், எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News