கேதார ராஜயோகம் 2024: ஜோதிடத்தில், கேதார ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. பொதுவாக 7 கிரகங்கள் நான்கு ராசிகளில் பெயர்ச்சி அடையும்போது கேதார ராஜயோகம் உருவாகும். இந்த மங்களகரமான கேதார ராஜயோகம் யாருடைய ஜாதகத்தில் அமைகிறதோ, அந்த ராசிக்காரர்கள் அரசனைப் போல் வாழ்வார்கள் என்பது ஜோதிடத் ஐதீகம். அதுமட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் அளவில்லா சொத்துக்கள் மற்றும் பணத்தை குவிப்பதில் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் தற்போது சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வமான கேதார ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். மேலும், திருமணத்தடை நீங்கி செல்வம் மற்றும் சொத்துக்களை குவிப்பார்கள். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் (Aries Zodiac Sign): 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள கேதார ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். ஏனெனில் உங்களது பெயர்ச்சி ஜாதகத்தின் அதிர்ஷ்ட வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஒன்றாக அமைந்திருக்கிறார், இது தவிர, சூரியன் கிரகம் கர்ம ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைந்திருக்கிறார், அதேசமயம் சனி பகவான் தாயின் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைந்திருக்கிறது. எனவே, அலுவலகத்தில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தைப் பெறுவார்கள், உங்களின் வணிகம் அதிகரிக்கும். பெரிய வணிக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடலாம். முதலீட்டின் மூலம் லாபம் கிடைக்கும். மேலும், பதவி உயர்வு கூடும்.


மேலும் படிக்க | Jupiter Transit 2024: 12 ஆண்டுக்கு பின் குரு உச்சம்.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ கோடீஸ்வர வாழ்க்கை


மிதுனம் (Gemini Zodiac Sign): 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள கேதார ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சூரிய பகவான் மிதுன ராசியின்  எட்டாவது வீட்டிலும் சனிபகவான் 11 ஆம் வீட்டிலும் பெயர்ச்சி அடைந்திருப்பதால், இந்த நேரத்தில் வணிகர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து குவியும். பொருளாதார நிலை மேம்படும். காதலிப்பவர்கள், இந்த காலகட்டத்தில் பெற்றோரின் அனுமதியைப் பெறுவது எளிது.


துலாம் (Libra Zodiac Sign): 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள கேதார ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பணியிடத்தில் சில புதிய பொறுப்புகளைப் பெறலாம். திரைப்படம், விளையாட்டு, இராணுவம் மற்றும் காவல்துறையுடன் தொடர்புடையவராக இருந்தால் உங்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். மாணவராக இருந்தால் போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது. நினைவுத்திறன் அதிகரிப்பதால், மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Mercury transit: புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் வாழ்வில் பண மழை, வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ