புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் வாழ்வில் பண மழை, வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Mercury Transit: புதனின் ஆதிக்கம் ஒருவர் மீது இருந்தால், அந்த நபர் அறிவாற்றல் மிக்கவராகவும் புத்திசாலியாகவும் திகழ்கிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவருக்கு வலுவான அறிவுசார் திறன்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2024, 10:21 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான பலன்களை அளிக்கும்.
  • அரசியல் துறையில் நுழைய முயல்பவர்களுக்கு இது ஏற்ற நேரம்.
  • மிதுன ராசியினருக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சாதகமாக இருக்கும்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் வாழ்வில் பண மழை, வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

புதன் பெயர்ச்சி: ஜோதிட கணக்கீடுகளின் படி, இந்த பிப்ரவரி மாதம் மிக முக்கியமான மாதமாக பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களில் மாற்றங்கள் ஏற்படும். பிப்ரவரி முதல் நாளே, அதாவது இன்றே கிரகங்களின் இளவரசன் புதன் தனது ராசியை மாற்றி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

புதனின் ஆதிக்கம் ஒருவர் மீது இருந்தால், அந்த நபர் அறிவாற்றல் மிக்கவராகவும் புத்திசாலியாகவும் திகழ்கிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவருக்கு வலுவான அறிவுசார் திறன்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, புதன் கிரகம் புத்திசாலித்தனம், தொழில் மேலாண்மை, அறிவாளித்தனம் மற்றும் எழுத்துத் திறனுக்கு காரணி கிரகமாக கருதப்படுகிறது. மேலும் அவர் பேச்சு மற்றும் பிறருடன் உறவுகளை பேணுவதிலும் திறமையானவராக இருக்கிறார். புதனின் அருளால் இப்படிப்பட்ட நபர்கள் தங்கள் கனிவான பேச்சாலேயே தங்களுக்கு தேவையானவற்றை நடத்திக்கொள்வார்கள். 

சனி பகவானின் ராசியில் புதனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் கூடும். இவர்கள் வாழ்வில் அனைத்து வித உச்சிகளையும் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

புதன் பெயர்ச்சியால் மகிழ்ச்சி மழையில் நனையவுள்ள ராசிகள்

மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி பல வித நல்ல பலன்களை அளிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு அடுத்த ஒரு வாரத்தில் தங்கள் நிலையில் மாற்றம் ஏற்படலாம். மூத்தவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் உடல் நலனில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. 

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான பலன்களை அளிக்கும். அரசியல் துறையில் நுழைய முயல்பவர்களுக்கு இது ஏற்ற நேரம். மிதுன ராசியினருக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்படும். மாத வருமானமும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | தனயோகம்... மகாலட்சுமியின் அருளால் செல்வமும் வளமும் பெரும் 'சில' ராசிகள்!

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்கள் தங்களது தொழிலில் திடீர் வெற்றியைப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்கும் எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். மாணவர்களுக்கு இது சாதமகான நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 
வேத ஜோதிட சாஸ்திரப்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் இனிமையாக இருக்கும். புதன் கிரகத்தின் பெயர்ச்சியின் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலத்தில் வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உருவாகும். 

கும்பம் (Aquarius)

புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த காலத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்திலும் முன்னேற்றங்கள் பல ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அன்பும் அதிகர்க்கும். 

மேலும் படிக்க | பிப்ரவரி மாத லக்கி ராசிகள்: வேலை, வியாபாரம் அமோகமாக இருக்கும், பண வரவு அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News