அங்காரக தோஷத்தை உருவாக்கும் செவ்வாய் சனி நட்பால் சின்னபின்னமாகப்போவது யார்?
mars transit 2024 march : கும்ப ராசியில் செவ்வாயும் சனியும் இணைவது சிலருக்கு யோகத்தைக் கொடுத்தால், சிலருக்கு யோகமாக இருக்கும் வாழ்க்கை கெடும்...
கும்பத்தில் செவ்வாயும் சனியும்: மங்கலகாரகர் என்று அழைக்கப்படும் செவ்வாய், பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார். ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் சனீஸ்வரர் செவ்வாயுடன் இணைகிறார். செவ்வாயும் சனியும் இணைவது அங்காரக் யோகத்தை உருவாக்கும், இது 12 ராசிகளின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மங்கலங்களை அருள்பவராக இருந்தாலும், அவர் சனீஸ்வரருடன் சேரும்போது, கர்மத்திற்கு ஏற்ற பலன்களை கொடுப்பார்.
கும்ப ராசியில் அங்காரக யோகம்
மகரத்தில் இருந்து செவ்வாய், சனியின் வீட்டிற்குள் நுழையப் போகிறார். 38 நாட்கள் மகர ராசியில் இருந்த பிறகு, செவ்வாய் மார்ச் 15-ம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் மூலம் கும்ப ராசியில் உருவாகும் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை அங்காரக் யோகத்தை உருவாக்குகிறது. பலருக்கு தீங்கு விளைவிக்கும் இந்த யோகத்தை அங்காரக தோஷம் என்றே சொல்லலாம்.
அங்காரக தோஷத்தால் 12 ராசிகளுக்கும் என்ன மாற்றங்கள் ஏற்படும்? தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்: சனியுடன் செவ்வாய் இணைவது, மேஷ ராசியினருக்கு சாதகமான பலன்கலைக் கொடுக்கும். மனைவியுடனான இணக்கம் மேம்படும். வியாபாரத்தில் விருத்தி, குடும்பத்தில் நிம்மதி என செவ்வாயின் அனுக்கிரகம் பூரணமாக உண்டு.
ரிஷபம்: வேலையை மாற்ற யோசிக்கும் எண்ணம் வரலாம். தாயின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள், மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கலாம். சொத்து சம்பந்தமான தகராறுகளும் வரலாம். உங்கள்உடல்நிலை சீராக இருக்கும்.
மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் உச்சம்.. பணக்கார கோடீஸ்வர யோகம், முழு பலன் இதோ
மிதுனம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் சூழ்நிலை மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், தந்தையின் உடல்நிலை மோசமடையக்கூடும் என்பதால் கவலைகளும் அதிகரிக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் காலம் இது. நல்ல நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து கவலைப்படலாம். உற்சாகமின்மை சோம்பல் என மனதில் சலிப்பும் ஏற்படும்.
சிம்மம்: யாரை அதிகமாக நம்புகிறீர்களோ அவர் உங்களை கவிக்க நினைக்கலாம். இதனால் மன வேதனை ஏற்படும். போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடலாம், மனநிலையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்
கன்னி:- கன்னி ராசிக்காரர்கள் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவது நல்லது. காதல் வாழ்க்கையில் இனிமை தொடரும் என்றாலும், குடும்பத்தினரின் உறவில் சிக்கல் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்: காதல் உறவுகளில் ஏற்படும் பிரச்சனை, வாழ்க்கை துணையுடனான உறவில் இனிமையை போக்கிவிடும். மனதில் காரணம் இல்லாத வேதனை ஏற்படும். முருகனை வழிபடுவது நல்லது.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊக்கம் கிடைக்கும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். நிதி இழப்பைத் தவிர்க்க, திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மேலும் படிக்க | சோபகிருது ஆண்டு மாசி 18ம் நாள் ராசிபலன்! நல்ல காலம் பொறக்குது, கவலை வேண்டாம்...
தனுசு: அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட தனுசு ராசியினர் அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் நன்மைகள் கிடைக்கும். கடின உழைப்பு பலனைத் தரும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் இருக்கலாம்காதல் உறவில் பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கலாம். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்
கும்பம்: வெளிநாட்டில் இருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தின் போது உடல்நலம் பாதிக்கப்படலாம்
மீனம்: மீன ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கினால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான விஷயங்களைத் தவிர்க்க வெளியில் இருந்து வாங்கும் உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: பணம், புகழ், பதவி... அனைத்தும் இவர்கள் வசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ