சனி அஸ்தமனம் 2024: ஜோதிடத்தில், சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. இதனுடன், இது மிகவும் கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியின் நிலை சற்று மாறினாலும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஏதோ ஒரு வித பாதிப்பு ஏற்படும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, தற்போது சனி தனது ராசியான கும்பத்தில் அமைந்துள்ளது. 2024ம் ஆண்டிலும் இதே ராசியில்தான் இருக்கும். இந்த காலகட்டத்தில் சனி அஸ்தமனம், உதயம் மற்றும் வக்ர பெய்ர்ச்சி என எல்லாம் நிகழும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்தாண்டு 2024 இல், சனி பிப்ரவரி 11, 2024 முதல் மார்ச் 18, 2024 வரை அஸ்தமனம் ஆகிறது. சனியின் அஸ்தமனம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும். ஆனால் சனி நீண்ட காலம் அஸ்தமன நிலையில் இருக்க மாட்டார். அத்தகைய சூழ்நிலையில், அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 2024-ம் ஆண்டு சனிபகவான் அஸ்தமனம் ஆவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேஷ ராசி  (Aries Zodiac)


மேஷ ராசிக்கு பதினோராம் வீட்டில் சனி இருப்பார். சனியின் அஸ்தமனத்தால் இந்த ராசிக்காரர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். தனது ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுவதில் சிரமங்கள் ஏற்படலாம். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த காலகட்டத்தில் சிறிது நேரம் காத்திருக்கவும். நிதி நிலைமையில் சில பாதகமான தாக்கங்கள் இருக்கலாம். ஆனால் சனி மார்ச் 18ல் உதயமாகும் என்பதால் பயப்பட தேவையில்லை. சனி அஸ்தமனம் ஆவதினால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப பிரச்சனைகளும் வரலாம். இதனுடன் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் தேவை.


மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி... நவம்பர் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு கொண்டாட்டம்!


ரிஷப ராசி (Taurus Zodiac)


ரிஷப ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதி சனி. அவர் கும்ப ராசியில் நுழைந்து இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் 2024-ம் ஆண்டு மாசி மாதம் சனிபகவான் அஸ்தமனம் ஆவதால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சில சிரமங்கள் அதிகரிக்கலாம். பல முயற்சிகளுக்குப் பிறகும் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், சில பதட்டமான சூழ்நிலை ஏற்படலாம். வேலையிலும், வியாபாரத்திலும் சற்று எச்சரிக்கை தேவை. வேலையில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்புகளைத் தேடி வேலைகளை மாற்ற நினைத்தால், சனி உதயமாகும் வரை காத்திருங்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.


கன்னி ராசி (PiscesZodiac)


கன்னி ராசியில் ஆறு மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி ஆறாம் வீட்டில் அஸ்தமனம் ஆகிறார். சனி அஸ்தமனம் ஆவதால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கடினமாக உழைத்தாலும் வெற்றியை அடைவதில் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தாருடன் சில பிரச்சினைகளால் தகராறு ஏற்படலாம். நிதி நிலைமை சற்று பலவீனமாக இருக்கலாம். சில பழைய உடல் நல பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கக்கூடும் என்பதால் உங்கள் உடல்நிலையில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்.. முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ