சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்: நாட்டின் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல்வாழ்விற்காக அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் மூலம் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற அரசு முயற்சிக்கிறது. அந்த வகையில், அத்தகைய பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் மத்திய மோடி அரசால் இந்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக மாதம் தோறும் சிறிய அளவிலான பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் பெரிய நிதியை உருவாக்கலாம். தற்போது, சுகன்யா சம்ரித்தி யோஜனா மீதான வட்டி ஆண்டுக்கு 8 சதவீதம்.
SSY என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகள்களின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம். இதில், மகளுக்கு 21 வயதாகும் போது முதிர்வுத் தொகை பெறப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டங்களிலேயே அதிக வட்டி செலுத்தும் திட்டம் இதுவாகும். சிறு சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
5000 ரூபாய் முதலீட்டில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் ரூ.60,000 டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வழியில், நீங்கள் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9,00,000 முதலீடு செய்வீர்கள். இதில் 15வது ஆண்டு முதல் 21 ஆண்டு வரை டெபாசிட் செய்ய வேண்டாம். ஆனால் உங்கள் தொகைக்கு 8 சதவீதம் வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும். இப்போது ரூ.9 லட்சத்தின் மொத்த முதலீட்டில் உங்களுக்கு ரூ.17,93,814 வட்டி கிடைக்கும். இது மொத்த முதலீட்டை விட கிட்டத்தட்ட இருமடங்காக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதிர்ச்சியின் போது மொத்தம் ரூ. 26,93,814 பெறுவீர்கள், அதாவது சுமார் ரூ.27 லட்சம். ஆண்டுக்கு குறைந்தது ரூ.250 முதலீடு செய்து இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1,50,000 முதலீடு செய்யலாம்.
உங்கள் மகளுக்கு 64 லட்சம் கிடைக்க முதலீடு செய்ய வேண்டிய தொகை
சுகன்யா சம்ரித்தி யோஜனா உங்கள் மகளை பணக்காரராக்கும். சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் இந்தத் தொகை ரூ.1.5 லட்சமாக இருக்கும். நாம் முதிர்ச்சியின் போது 7.6% வட்டி விகிதம் என கணக்கிட்டால், முதலீட்டாளர் தனது மகளுக்கு முதிர்வு காலத்தில் ஒரு பெரிய நிதியை உருவாக்குவார். முதலீட்டாளர் தனது மகளுக்கு 21 வயதாகும் போது முழுத் தொகையையும் திரும்பப் பெற்றால், முதிர்வுத் தொகை ரூ.63 லட்சத்து 79 ஆயிரத்து 634 ஆக இருக்கும். இதில் முதலீடு செய்யப்படும் தொகை ரூ.22,50,000. அதேசமயம், வட்டி வருமானம் ரூ.41,29,634 ஆக இருக்கும். இப்படி ஒவ்வொரு மாதமும் 12,500 ரூபாய் சுகன்யா சம்ரித்தி கணக்கில் டெபாசிட் செய்தால், மகளுக்கு 21 வயதாகும் போது சுமார் 64 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
முதலீடு, வருமானம் இரண்டிற்கும் வரிச் சலுகை
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது வரி இல்லாத திட்டமாகும். இதற்கு மூன்று வெவ்வேறு நிலைகளில் அதாவது EEE பிரிவில் வரி விலக்கு கிடைக்கிறது. முதலாவதாக, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வருடாந்திர முதலீட்டுக்கு விலக்கு. இரண்டாவதாக, அதிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கு வரி இல்லை. மூன்றாவதாக, முதிர்வின்போது பெறப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பெண் குழந்தையின் 10 வயதுக்கு முன் கணக்கை தொடக்கவும்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், மகள்கள் 10 வயது நிறைவடைவதற்கு முன்பே கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு மகள்களின் கணக்குகளைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மகளின் திருமணம் மற்றும் உயர்கல்விக்கான நிதியை திட்டமிட்டு ஏற்பாடு செய்யலாம்.