மகரத்தில் நுழையும் புதன்! அளவில்லாத செல்வத்தையும் வளத்தையும் பெற உள்ள ‘6’ ராசிகள்!
Mercury Transit Febrauary 2023: புதன் நுண்ணறிவு, அறிவுத் திறன், தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.
புதன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் நேரடியாகவோ அல்லது வேறு ஏதேனும் ராசியில் சஞ்சரித்தோ இருந்தால், அதன் பலன் மற்ற எல்லா ராசிகளுக்கு கிடைக்கும். இந்த பலன்கள் சில சமயங்களில் சுப பலன்களாகவும் சில சமயங்களில் கெடு பலன்களாகவும் இருக்கும். ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. புதன் நுண்ணறிவு, அறிவுத் திறன், தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.
தற்போது புதன் தனுசு ராசியில் உதயமாகிறார். அவர் 12 நாட்களுக்குப் பிறகு, அதாவது பிப்ரவரி 7 ஆம் தேதி, சனிபகவானின் ராசியான மகர ராசியில் நுழைவார். இந்த புதனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதேசமயம் சிலருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். புதனின் இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பன பலன் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
புதன் பெயர்ச்சி தேதி மற்றும் நேரம்
ஜோதிட சாஸ்திரப்படி பிப்ரவரி 7ம் தேதி காலை 7.38 மணிக்கு புதன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். பிப்ரவரி 27 வரை புதன் இந்த ராசியில் இருப்பார்.
மகிழ்ச்சியை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். மேஷ ராசியின் பத்தாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களின் வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரத்தை பெறுவார்கள். வருமானம் பெருகும். பெயரும் புகழும் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும்.
ரிஷபம்
புதனின் இந்த சஞ்சாரம் ரிஷப ராசியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும். கிரகங்களின் அதிபதி ரிஷப ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பார். திரும்ப கிடைக்காது என்ற பணம் கிடைக்கும். குடும்பத்தில் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவையும் தீர்ந்துவிடும். நீங்கள் எங்காவது முதலீடு செய்ய நினைத்தால், அதற்உ ஏற்றா நேரம் இது,. முதலீடுகளில் நல்ல லாபம் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு அன்னை மகாலட்சுமியின் பரிபூரணமான ஆசிகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்கு ஏழாவது வீட்டில் புதன் சஞ்சரிக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள், சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் மன நிம்மதி கிடைக்கும்.
மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!
கன்னி
கன்னி ராசியினருக்கு புதனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். புதன் இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குழந்தைகளுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வேலை தேடிக்கொண்டிருந்தால், அதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடு பலனளிக்கும். அரசு வேலைக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும்
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி மகிழ்ச்சியை தருகிறது. இந்த ராசிக்கு நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உள்ள மேலதிகாரி உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பார். புதிய பொறுப்புகளை வழங்கலாம். இருப்பினும், தாயின் உடல்நிலை சிறிது கவலைக்கிடமாக இருக்கும்.
கும்பம்
இந்த ராசிக்கு 12வது வீட்டில் புதன் பெயர்ச்சி நடக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணம் தற்செயலாக அமையும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ