எண் கணிதத்தின்படி, சில பரிகாரங்களின் உதவியுடன், வேலை மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். எண் ஜோதிடத்தின் இந்த பரிகாரங்கள் வணிகம் மற்றும் வேலையில் வெற்றி பெற உதவுவது மட்டுமல்லாமல், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் பிறந்த தேதியின்படி எந்தெந்த பொருட்களை அணிய வேண்டும் என்பது உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):


எண் கணிதத்தின்படி, 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். பொருளாதார நிலை வலுப்பெறும். வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்


எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)


எண் கணித நிபுணர்களின் கூற்றுப்படி, 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வெள்ளி மோதிரம் அல்லது வளையல் அணிவது மிகவும் மங்களகரமானது. இது உங்கள் அதிர்ஷ்டத்தை பலப்படுத்துகிறது. இதனுடன், வணிக-வேலையில் முன்னேற்றம் பெறவும் அவை உதவியாக இருக்கும்.


எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):


எண் கணிதத்தின்படி, 03, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மஞ்சள் கைக்குட்டையை அருகில் வைத்திருப்பது நல்லது. உண்மையில், இது ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெற அவர்களுக்கு உதவுகிறது.


எண் 4 ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):


எண் கணித வல்லுனர்களின் கூற்றுப்படி, எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மரத்தால் செய்யப்பட்ட பேனாவைத் தங்களிடம் வைத்திருப்பது மங்களகரமானது. இப்படிச் செய்வதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.


எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)


5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பச்சை நிற பணப்பையை கையில் வைத்திருப்பது நல்லது. இதனால் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதத்தைப் பெறவும், வேலை-வியாபாரத்தில் முன்னேற்றம் பெறவும் பச்சை நிற பர்ஸ் ஒன்றைத் தங்களிடம் வைத்திருக்க வேண்டும். இது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.


எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) 


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வைரம் அணிவது நல்லது. இதனுடன், வாசனை திரவியத்தை உங்களுடன் வைத்திருந்தால், நீங்கள் இன்னும் பல நன்மைகளைப் பெறலாம்.


மேலும் படிக்க | சுக்கிரன் வக்ர பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்


எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)


ஒரு நபர் எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், அவர் உலோக கடிகாரத்தை அணிவது மிகவும் சுபமாக இருக்கும். எண் கணிதத்தின்படி, இதைச் செய்வதன் மூலம், வாழ்க்கையில் அதிர்ஷ்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேறுவார்கள்.


எண் 8 ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)


எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், நீல நிற கைக்குட்டையை தங்களுடன் வைத்திருப்பது நல்லது. இந்த அதிர்ஷ்ட பொருள் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.


எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)


நீங்கள் எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால், உங்கள் அதிர்ஷ்டம் உங்கள் மணிக்கட்டில் கட்டப்படும் கோயில் கயிறு. ஆகும். அத்தகைய சூழ்நிலையில், 9 ஆம் எண் நபர்களின் மணிக்கட்டில் அவர்களுக்கு உகந்த கடவுளுக்கான கயிற்றினை கட்டுவது நல்ல பலனைத் தரும். இந்த பரிகாரம் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெற அவர்களுக்கு உதவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அமலா ராஜயோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு பணத் தட்டுப்பாடு என்பதே இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ