புதன் பெயர்ச்சி 2023: கிரகங்களின் இளவரசனான புதம், கல்வி, வணிகம், பேச்சு, எழுத்து, தகவல் தொடர்பு திறன், அறிவுத்திறன், அறிவு மற்றும் உடன்பிறப்புகள் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் இந்த கிரகத்தின் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் புத்திசாலியாக இருப்பதோடு, அவரது மொழி அறிவு தொடர்ப்புத் திறன் ஆகியவை சிறப்பாக இருக்கும். கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்று மீனத்தில் வலுவிழந்த நிலையில் இருக்கும் புதன்,  சூரியன், சுக்கிரன் மற்றும் ராகுவுடன் நட்பாக உள்ளார். அதே சமயம் சந்திரனை எதிரியாகக் கருதுகிறர் புதன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முறை புதன் பெயர்ச்சியில் 2023 ஜூலை 25 முதல் 2023 அக்டோபர் 01 வரை சிம்மத்தில் நீடிப்பதால் சிலரின் பொருளாதார நிலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் மிகச் சிறந்தபலனைக் காண்பிக்கும். அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம்புதன் கிரகம் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், அனைத்து 12 ராசிகளுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


மேஷம்


புதன்கிழமையன்று, விநாயகர் கோவிலுக்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு 21 வெல்லம் உருண்டைகளைக் கொண்டு அருகம்புல்லை சமர்பிக்கவும். தொழுநோயாளிகள் அல்லது ஊனமுற்றோருக்கு உணவளிக்கவும். உங்கள் வாழ்க்கை வெற்றிகள் அனைத்தையும் பெற்று சிறப்பாக இருக்கலாம்.


ரிஷபம்


புதன் கிழமை அன்று 11 தேங்காய்களால் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து, பூஜிக்கவும். பச்சை நிறக் கைக்குட்டையை உங்கள் பாக்கெட்டில் அல்லது பணப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீ கஜேந்திர மோட்சத்தை பாராயணம் செய்வதும், தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் செய்வதால், புதன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.


மிதுனம்


வீட்டில் புதன் யந்திரத்தை நிறுவி, குங்குமப்பூ கலந்த பாலில் அபிஷேகம் செய்தால், உங்கள் ஜாதகத்தில் புதன் நிலை வமுப்பெறும். பறவைகளுக்கு தானியங்கள், பசுக்கள் மற்றும் நாய்களுக்கு ஏதாவது உணவளிக்கவும்.


கடகம்


ஒவ்வொரு புதன் கிழமையும் விநாயகர் பெருமானும் அரும்புல் சாற்றி வழிபட்டு வரவு, தேவைப்படுபவர்களுக்கு பச்சை பயறு தானம் செய்யுங்கள். உங்கள் தந்தைக்கு பச்சை நிற பொருள் ஏதாவது பரிசளிக்கவும், இது புதன் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.


சிம்மம்


புதன் கிரகத்தை வலுப்படுத்த, யாகம் மற்றும் ஹோமம் செய்து, விநாயகருக்கு சந்தனம் சாற்றி, பூவினால் அர்ச்சனை செய்யுங்கள். புதன்கிழமை ஜோடி பறவைகளை விடுவிக்கவும்.


கன்னி


புதன்கிழமை காலை, விநாயகருக்கு 11 அல்லது 21 அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்து, "ஓம் பிரான் பிரான் ச: புதாய நம" என்ற மந்திரத்தை உச்சரிக்க, புதன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அரச மரத்திற்கு மரத்திற்கு தண்ணீர் ஊற்றி அதன் கீழ் தீபம் ஏற்றவும்.


துலாம்


புதன் கிழமையன்று தேங்காய், கற்பூரம், செம்பருத்தி மாலை சாற்றி துர்கா தேவியை வழிபடவும். இதனுடன் அன்னையை கற்பூரத்தால் ஆரத்தி செய்யவும். சிறுமிகளுக்கு உணவளிக்கவும்.


விருச்சிகம்


புதன் கிழமையன்று பசுவிற்கு பசுந்தீவனம் அளிக்கவும் அன்ன தானம் செய்யவும். இதனுடன் மரகத ரத்தினத்தை தங்க மோதிரத்தில் பதித்து வலது கை சுண்டு விரலில் அணிய வேண்டும்.


தனுசு


புதன்கிழமை இரவு தலைக்கு அருகில் தேங்காயை வைத்துக்கொண்டு தூங்குங்கள். மறுநாள் அந்த தேங்காயை விநாயகர் கோவிலில் சிறிது தட்சிணையுடன் சமர்பிக்க வேண்டும். விக்னஹர்த விநாயகர் மூலத்தையும் படியுங்கள். பச்சை நிறக் கைக்குட்டை,  ஆடை ஆகியவற்றை ஒரு அண்ணனுக்குக் கொடுங்கள்.


மகரம்


புதன்கிழமை அன்று ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தை பாராயணம் செய்து, ஊறவைத்த பச்சைப்பயறுகளை பறவைகளுக்கு அளிக்கவும். ஹனுமான் சாலிசாவைப் படியுங்கள். ஹனுமானுக்கு பிரசாதம் நைவேத்தியம் செய்து அனைவருக்கு அளிக்கவும்.


கும்பம்


புதன் கிழமையன்று ஓம் பம் புதாய நம மந்திரத்தை 108 முறை உச்சரித்து, உங்கள் சகோதரி, அத்தை அல்லது மகளுக்கு பச்சை வளையல்கள் அல்லது ஆடைகளை பரிசாக அளித்தால், புதன் வலுவடையும். புதனின் தீமைகளை நீக்க, பசுவுக்கு உணவளிக்கவும்.


மீனம்


புதன் கிழமையன்று ஸ்ரீ விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு அருகம்புல் மற்றும் செம்பருத்தி மலர்களை அர்ச்சித்து, அங்கேயே அமர்ந்து ஓம் கணபதயே நமஹ மந்திரத்தை 13 முறை ஜபிக்கவும். பூஜித்த, சிறிது அருகம்புல் மற்றும் செம்பருத்தி பூக்களை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தால் புதன் வலுவடையும். 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க |  வார ராசி பலன் : ஜூலை கடைசி வாரம் ‘இந்த’ ராசிகளுக்கு அமோகமான வாரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ