சங்கடம் தீர்க்கும் சனி ஜெயந்தி... சனி பகவானின் மனம் குளிர செய்ய வேண்டியவை!
Lord Shani Jeyanthi: சனீஸ்வரன், கர்மத்திற்கு ஏற்ப பலனை வழங்குவதால் நீதிக்கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.
Lord Shani Jeyanthi: ஒருவரின் ஆயுளை தீர்மானிக்கக் கூடியவராக இருக்கும் சனீஸ்வரன், கர்மத்திற்கு ஏற்ப பலனை வழங்குவதால் நீதிக்கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் செய்யும் பூஜை மற்றும் வழிபாடுகள், சனி பகவானின் அருளை பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
நவகிரகங்களில் கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி பகவான், நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கான பலன்களை கொடுக்கிறார். சனி பகவான் அவதரித்த தினமான வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமான 2024 மே மாதம் 7ஆம் தேதி, சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மே 7 ஆம் தேதி காலை 11:40 மணிக்கு தொடங்கும் அமாவாசை மே 8 ஆம் தேதி காலை 8:51 மணிக்கு நிறைவடையும். மே 7 ஆம் தேதி மாலை 5:20 மணி முதல் இரவு 7:01 மணி வரை சனி ஜெயந்திக்கு உகந்த நேரம் என கூறப்படுகிறது.
வைகாசி மாதம் அமாவாசை நாளினை சனி ஜெயந்தியாக கடைபிடிக்கும் நிலையில், இந்த நாளில் சனி பகவானை வணங்குவதோடு ஏழை, எளியவர்களுக்கு அன்ன தானங்கள் செய்வது சனி பகவானை மகிழ்விக்கும். சனி ஜெயந்தி நாளில், நீதிக் கடவுளாக இருக்கக்கூடிய சனி பகவானை வழிபட்டு, அவருக்கு உகந்த எள் தீபம் ஏற்றி, கருப்பு நிற வஸ்திரத்தை சாற்றி வழிபடவது, சிறந்த பலனைக் கொடுக்கும்.
ஏழரை நாட்டு சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், துன்பங்கள் பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் பெற சனி பகவானை சனி ஜெயந்தி நாளில் வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.
சனி பகவான், ஏழரை சனி காலத்தில், ஒருவருக்கு ஏழரை சனியாக வரும் போது அவர் செய்த பாவங்களுக்கும், தர்மங்களுக்கும் ஏற்ற வகையில் சரியான வகையில் தண்டனை கொடுத்து நல்வழிப்படுத்துவார். இந்நிலையில், சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்
ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சனி ஜெயந்தியில் மட்டுமல்லாது, சனிக்கிழமைகளில் அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடுவதால், சனி தோஷம் மற்றும் ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபாடலாம்.
ஏழை எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானதாகும். ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தாலே அவரின் அருள் நிச்சயம் நமக்கு கிடைத்து விடும். யாரையும் ஏளனமாக எண்ணாமல் இருப்பதும், அனைவரையும் மதித்து நடப்பதும், நமக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நேர்மையாக செய்து முடிப்பதும், அடுத்தவருக்கு குடுதல் நினைக்காமல் இருப்பதும் சனி பகவானின் கெடு பலனிலிருந்து தப்பிக்கக் கூடிய எளிய சிறந்த வழிகளாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ